2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சாட்டி பீச் ரிசோர்ட் விஸ்தரிப்புக்காக டில்கோ 300 மில்லியனை ஒதுக்கம்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாட்டி பீச் ரிசோர்ட் பகுதியிலுள்ள ஹோட்டலை மேலும் விஸ்தரிப்பதற்கு 300 மில்லியன் ரூபாவை முதலீடு செய்ய டில்கோ முன்வந்துள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து ஏழு கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ள சாட்டி கடற்கரை பகுதி என்பது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை அதிகளவு ஈர்த்த பிரதேசமாக அமைந்துள்ளது.
 
புகையிரத பாதையும் தற்போது வட பகுதிக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பிரதேசத்தில் உயர் தரம் வாய்ந்த ஹோட்டல் ஒன்றுக்கான கேள்வி அதிகரித்த நிலையிலுள்ளது. இந்நிலையில், இந்த ஹோட்டலை விஸ்தரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக டில்கோ ஹோட்டலின் முகாமைத்துவம் அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X