2026 ஏப்ரல் 24, வெள்ளிக்கிழமை

முதல் காலாண்டின் மொத்த தேசிய உற்பத்தி 6.0 வீதமாக பதிவு

A.P.Mathan   / 2013 ஜூன் 24 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதலாவது காலாண்டில் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி 6.0 வீதமாக பதிவாகியுள்ளதாகவும், நடப்பு ஆண்டில் எதிர்வுகூறப்பட்ட 6.5 – 7 வீத அதிகரிப்பு என்பதை விட இந்த பெறுமதி குறைவானதாக அமைந்திருந்த போதிலும், உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறந்த பெறுமதியாக அமைந்துள்ளதாக DNH பினான்சியல் எனும் பங்கு முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது.
 
இந்த பெறுமதியில் தொழிற்சாலை, சேவைகள் மற்றும் விவசாயத் துறைகள் போன்றன 10.7, 4.3 மற்றும் 2 வீத அதிகரிப்பை பதிவு செய்திருந்தன. இந்த பெறுமதிகள் 2012ஆம் ஆண்டின் முதல் காலாண்டு பகுதியுடன் ஒப்பிடுகையில் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
2013ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உலகளாவிய ரீதியில் இந்தோனேசியா 6 வீத அதிகரிப்பையும், சீனா 7.7 வீத அதிகரிப்பையும், பிலிப்பைன்ஸ் 7.8 வீத அதிகரிப்பையும் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .