
முன்னணி சர்வதேச தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனத்தின் உள்நாட்டு அலுவலகமான Huawei, மற்றும் இலங்கையின் முதல் தர வர்த்தக நாமமும், ஸ்மார்ட்ஃபோன் விநியோகத்தருமான சிங்கர் ஸ்ரீலங்கா பிஎல்சி ஆகியன இணைந்து புதிய Huawei Ascend Mate7 கையடக்க தொலைபேசியை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளன. 6 அங்குல அல்ட்ரா வேக ஸ்;மார்ட்ஃபோன் வகையாக இது அமைந்துள்ளது. இந்த அறிமுக நிகழ்வு கொழும்பில் இடம்பெற்ற சிங்கர் லைஃவ்ஸ்டைல் கண்காட்சி மற்றும் களியாட்ட சந்தையின் போது இடம்பெற்றது. பரிஸ், பேர்ளின் மற்றும் பாங்கொக் ஆகிய நகரங்களில் வெற்றிகரமாக Huawei Ascend Mate7 கையடக்க தொலைபேசி அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து கொழும்பில் இந்த புதிய வகை கையடக்க தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Huawei Ascend Mate7 என்பது Huawei நிறுவனத்தின் டேர்மினல் பிரிவின் தலைமை அதிகாரி ஹென்ரி லியு, சிங்கர் ஏசியாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி கெவின் வோல்கர், சிங்கர் ஸ்ரீலங்கா பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசோக பீரிஸ் மற்றும் சிங்கர் ஸ்ரீலங்கா பிஎல்சியின் சந்தைப்படுத்தல் மற்றும் வணிக பணிப்பாளர் மஹேஷ் விஜயவர்தன ஆகியோரின் பங்குபற்றலுடன் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்த அறிமுகத்தின் போது கண்காட்சியை பார்வையிட வருகை தந்திருந்த அனைவருக்கும் இந்த புதிய கையடக்க தொலைபேசியை அனுபவித்து பார்ப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
Huawei Ascend Mate7 இல் அடங்கியுள்ள சிறப்பம்சங்களாக 6 அங்குல திரை உடன் கூடிய FHD டிஸ்பிளே, மெல்லிய 7.9 மில்லி மீற்றர் வடிவமைப்பு, அதிகளவு வினைத்திறன் வாய்ந்த octa-core chipset, நீடித்து உழைக்கக்கூடிய 4100 mAh பற்றரி போன்றன உள்ளடங்கியுள்ளன. இந்த சாதனம் புதிய ஒற்றைத் தொடுகை தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதுடன், EMUI 3.0 ஐயும் கொண்டுள்ளது. Ascend Mate7 என்பது மொபைல் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளதுடன், பாவனையாளர்களுக்கு இலகுவான முறையில் பாவிக்கக்கூடியதாகவும் காணப்படுகிறது. Huawei Ascend Mate7 இன் விலை ரூ. 69,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு வருட சிங்கர் உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.
Huawei சாதனங்களுக்கான தென்கிழக்காசிய பிராந்தியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தோமஸ் லியு கருத்து தெரிவிக்கையில், 'Ascend Mate7 என்பது Huawei அறிமுகம் செய்துள்ள புதிய பெரிய திரையை கொண்ட ஸ்மார்ட்ஃபோன் வகையாகும், உலகின் மூன்றாவது சிறந்த ஸ்மார்ட்ஃபோன் விநியோகத்தர் எனும் வகையில் சிறந்த எதிர்காலத்தை கொண்டுள்ளது. பெரிய திரை கொண்ட ஸ்மார்ட்ஃபோன்கள் வரிசையில் முன்னணியில் திகழ்கிறது. அத்துடன், சிறந்த வலுச்சிக்கனம் மற்றும் சிறந்த சௌகர்யம் மற்றும் ஒற்றைத் தொடுகை fingerprint தொழில்நுட்பம் போன்றனவும் உள்ளடங்கியுள்ளன' என்றார்.
இந்நிகழ்வில் சிங்கர் ஸ்ரீலங்கா பிஎல்சி நிறுவனத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி அசோக பீரிஸ் கருத்து தெரிவிக்கையில், 'Huawei இன் தொழில்நுட்பம் என்பது நுகர்வோரின் மாறுபட்டு வரும் இயல்பு மற்றும் அதற்கேற்ற தொழில்நுட்பம் ஆகியவற்றை கொண்டமைந்துள்ளது. இதன் மூலமாக மும்முனை வெற்றி வாய்ப்பை வாடிக்கையாளருக்கு வழங்கும் வகையில் அமைந்துள்ளது' என்றார்.
சிங்கர் ஸ்ரீலங்கா என்பது இலங்கையின் முதல் தர ஸ்மார்ட்ஃபோன் சந்தைப்படுத்தும் நிறுவனமாகும். இலங்கையின் மிகப்பெரிய விநியோக வலையமைப்பான சிங்கர் ஊடாக இந்த தயாரிப்புகளை கொள்வனவு செய்ய முடியும். இதில் 400க்கும் அதிகமான சிங்கர் மெகா, சிங்கர் ப்ளஸ் மற்றும் சிசில் வேர்ல்ட் ஸ்ரோர்ஸ் போன்றன உள்ளடங்கியுள்ளன. மற்றும் சிங்கரின் டிஜிட்டல் மீடியா நாளிகை ஊடாக 1400 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் மீடியா விற்பனையகங்கள் நாடு முழுவதும் காணப்படுகின்றன. இவற்றிலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.



