.jpg)
நேற்றைய தினம் பங்கு கொடுக்கல் வாங்களின் போது புரள்வு பெறுமதி 8.2 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. இதில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அதிகளவு பங்களிப்பு வழங்கியிருந்தது. லயன் பிரெவரி மற்றும் டயலொக் ஆக்சியாடா ஆகிய பங்குகள் மீது விலை உயர்வுகள் பதிவாகியிருந்ததன் காரணமாக, சுட்டிகள் நேர் பெறுமதிகளில் நிறைவடைந்திருந்தன. புரள்வு பெறுமதியில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் 89 வீதமான பங்களிப்பை வழங்கியிருந்தது. மொத்த அடிப்படையில் பெருமளவான பங்குகள் கைமாறியிருந்தன. MTD வோல்கர்ஸ் மற்றும் செலான் வாக்குரிமையற்ற பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டிருந்தனர், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கொழும்பு டொக்யார்ட் பங்குகள் மீது இவர்களின் ஈடுபாடு பதிவாகியிருந்தது.
பன்முகத்துறை என்பது சந்தைப்புரள்வு பெறுமதியில் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தது (ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்களிப்புடன்) இந்த துறையின் சுட்டெண் 1.01 வீத அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்கொன்றின் விலை 4.00 ரூபாவால் (1.67%) அதிகரித்து 244.00 ரூபாவாக பதிவாகியிருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 18,904,854 பங்குகளால் அதிகரித்திருந்தது.
வங்கி, நிதியியல் மற்றும் காப்புறுதித் துறை என்பது சந்தையின் புரள்வு பெறுமதியில் இரண்டாவது உயர் பங்களிப்பை வழங்கியிருந்தது. (ஹற்றன் நஷனல் வங்கி பங்களிப்புடன்) இந்த துறை 0.30 வீத சரிவை பதிவு செய்திருந்தது. ஹற்றன் நஷனல் வங்கி பங்கொன்றின் விலை 0.40 ரூபாவால் (0.24%) அதிகரித்து 167.50 ரூபாவாக நிறைவடைந்திருந்தது.
கொழும்பு டொக்யாட், டெக்ஸ்ச்சர்ட் ஜேர்சி லங்கா மற்றும் ஆவுனு வோல்கர்ஸ் ஆகிய பங்குகளும் புரள்வு பெறுமதியில் உயர் பங்களிப்பை வழங்கியிருந்தன. கொழும்பு டொக்யாட் பங்கொன்றின் விலை 1.00 ரூபாவால் (0.50%) குறைந்து 200.00 ரூபாவாக பதிவாகியிருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 44,377 பங்குகளால் குறைந்திருந்தது. டெக்ஸ்ச்சர்ட் ஜேர்சி லங்கா பங்கொன்றின் விலை 0.60 ரூபாவால் அதிகரித்து 19.40 ரூபாவாக பதிவாகியிருந்தது. மேலும் ஆவுனு வோல்கர்ஸ் பங்கொன்றின் விலை 3.00 ரூபாவால் அதிகரித:து 44.70 ரூபாவாக பதிவாகியிருந்தது.