2026 மே 01, வெள்ளிக்கிழமை

'முதன்மை விருதுகள் 2013'

Kogilavani   / 2013 நவம்பர் 26 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பீஎல்சி நிறுவனம் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திய தனது பணியாளர்களைக் கௌரவிக்கும் முகமாக அண்மையில் 'முதன்மை விருதுகள் 2013' என்ற நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. தொடர்ந்து 14 ஆவது ஆண்டாகவும் இடம்பெற்ற இந்நிகழ்வு வாதுவ புளூ வோட்டர்ஸ் ஹோட்டலில் இடம்பெற்றிருந்தது.

கடந்த நிதியாண்டில் மிகச் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்த பணியாளர்கள் மற்றும் கிளைகளைக் கௌரவித்து அவர்களுக்கு வெகுமதிகளை வழங்கும் வகையிலேயே இந்த விருதுகள் நிகழ்வு இடம்பெற்றது. மேலும் தேசிய மட்டத்தில் இடம்பெற்ற போட்டிகள் மற்றும் நிகழ்வுகளில் நிறுவனத்தின் சார்பில் கலந்துகொண்டு நிறுவனத்திற்கு பெருமை சேர்ப்பித்தவர்கள் மற்றும் மிகச் சிறந்த வர்த்தக சமூக நலன்புரிச் செயற்திட்டங்களை முன்னெடுத்திருந்த கிளைகளும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பீஎல்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், பொது முகாமையாளருமான டி.பி குமாரகே தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நிறுவனத்தின் வர்த்தக முகாமைத்துவ அணியினர் மற்றும் கிளை ஊழியர்கள் என 600 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பீஎல்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், பொது முகாமையாளருமான டி.பி குமாரகே இந்நிகழ்வு தொடர்பில் விபரிக்கையில் 'இலங்கையில் குத்தகைத் தொழிற்துறையில் சந்தையில் முன்னிலை வகிக்கும் ஒரு நிறுவனம் என்ற வகையில் எமது வெற்றிகளுக்குப் பின்னால் உள்ளவர்களை இனங்கண்டு அவர்களுக்கு உரிய கௌரவத்தை வழங்கவேண்டும் என்பதில் தீவிரமான அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றோம். எமது அனைத்து தொழிற்பாடுகளிலும் ஒரு முக்கிய அங்கமாக விளங்கி அர்ப்பணிப்புடன், கடின உழைப்பை வெளிப்படுத்தும் எமது ஊழியர்களை இனங்கண்டு அவர்களைக் கௌரவித்து, வெகுமதியளிப்பதை எமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரு கௌரவமாகவே நாம் கருதுகின்றோம்' என்று குறிப்பிட்டார்.  

1995 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பீஎல்சி நிறுவனம் இலங்கையில் குத்தகைத் தொழிற்துறையில் உறுதியான முன்னோடியாகத் திகழ்ந்துவருகின்றது. கடந்த 18 ஆண்டுகளில் குத்தகையின் அனைத்து துறைகளிலும் சிறப்பான சேவையின் அதிவிசேடமான பாரம்பரியத்தைக் கட்டியெழுப்பியுள்ள இந்நிறுவனம் தற்போது தன்னை சந்தை முன்னோடியாக நிலைநிறுத்தியுள்ளது.

தனிநபர்கள் முதல் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறைகள் மற்றும் மிகப் பாரிய நிறுவனங்கள் வரை நாட்டின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பீஎல்சி நிறுவனம் கொண்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், பல இலட்சக் கணக்கான இலங்கையர்கள் தரமான வாழ்க்கையை முன்னெடுப்பதற்கும் இந்நிறுவனம் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளது. காப்புறுதி, சிறுகடன்வசதிகள், மோட்டார்வாகன முகாமைத்துவம் மற்றும் அசைவற்ற ஆதன இருப்பு வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ள ஐந்து துணை நிறுவனங்களின் தாய்நிறுவனமே பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பீஎல்சி ஆகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .