2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கண்டி நகரில் நாளாந்தம் 400,000 பேர் வரை பயணிப்பு

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 02 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி நகரை நாளொன்றுக்கு சுமார் 400,000 பேர் வரை கடந்து செல்வதாக ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கண்டி மாநகர சபை, நகரை சுத்தமாக பேணுவதற்கு 241 மில்லியன் ரூபாவை வருடமொன்றில் செலவிடுவதாகவும் கணிப்பிடப்பட்டுள்ளது. 
 
நாளாந்தம் சுமார் 175 டொன் குப்பைகள் சேகரிக்கப்படுவதாகவும், இவற்றை கட்டுப்படுத்திக் கொள்வதற்கான தேவை காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கண்டி நகரம் இலங்கையின் சுற்றுலா பிரதேசங்களில் முக்கிய இடமாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X