.jpg)
டிரையம்ப் இன்டர்நெஷனல் நிறுவனத்தில் புதிய 'Cool Sensation' தெரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வெப்பமான மற்றும் ஈரலிப்பான நாட்களுக்கேற்ற பொருத்தமான உள்ளாடைகளை தெரிவு செய்ய வேண்டியமை மிக முக்கியமாகும். இந்த பருவகாலத்தில் நிச்சயமாக கூலான உள்ளாடைத் தெரிவாக 'Cool Sensation' அமைந்திருக்கும். பல்வகை செயற்பாடுகளை கொண்ட புதிய தெரிவுகள், நாள்முழுவதும் நீடிக்கும் உலர்தன்மை மற்றும் சுவாசிக்க ஏதுவாகவும், காற்றோட்டத்தை அதிகரிக்கும் வகையிலும் விசேட குளிர்ச்சியான மற்றும் காற்றோட்டமான துணியினால் உருவாக்கப்பட்டுள்ளது.
இப் புதிய தெரிவுகள் மென்மையாகவும், எடையற்றதாகவும் காணப்படுகிறது. இந்த பிரா வகைகளின் கப்கள், வளைவான தோற்றத்தையும், சிறந்த ஆதாரத்தையும் வழங்குகிறது. 'Cool Sensation' தெரிவுகள் உஷ்ணமான நேரங்களில் மேலதிக சௌகரியத்தை வழங்குகின்றன.
கப் லைனில் பயன்படுத்தப்பட்டுள்ள இலாஸ்டிக் துணியானது, அணிபவருக்கு மென்மையையும், சௌகரியத்தையும் வழங்குகிறது. கப்களின் கீழேயுள்ள 45° கோண விசேட பட்டியானது வண்ணத்துப்பூச்சி போன்ற தோற்றத்தை வழங்குவதோடு, சிறந்த பிடிமானத்தை கொடுக்கிறது. இருப்பக்க பெனல்கள் அக்குள்களுக்கு கீழே அதிக பாதுகாப்பை வழங்குகிறது. மூன்று trenslo வடிவங்களும் சிறப்பான தோற்றப்பாணியை வழங்குவதாக அமைந்துள்ளன.
மேலும் body dress தெரிவுகள் நிச்சயமாக விழாக்களின் போது பொருத்தமானதும், மென்மையானதுமான தோற்றத்தையும் பெண்களுக்கு வழங்குகிறது. இந்த body dress ஆனது குறுக்கு பின்புறம், ஹோல்ட்டர், strapless மற்றும் ஒற்றை தோற்பட்டை போன்ற பல்வேறு அலங்கார தெரிவுகளில் விற்பனைக்குள்ளன. இலாஸ்டிக் பட்டியானது ஆடைகள் சுருங்குவதை தடுக்கும் வகையில் கீழேயிருந்து உட்புறமாக தைக்கப்பட்டுள்ளது.
இந்த 'Cool Sensation' தெரிவுகள் சௌகரியம் மற்றும் நேர்த்தியான முடிவை கொண்ட மிருதுவான வடிவமைப்பாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இடுப்பிற்கு அழகிய தோற்றத்தை high waist வடிவமைப்பு வழங்குகிறது. வயிற்றுப்பகுதியை கட்டுப்படுத்த முன்புறம் மத்திய எடையிலான துணியும், மென்மை மற்றும் சௌகரியம் கருதி பின்புறம் குறைந்த எடையிலான துணியும் பயன்படுத்தப்பட்டுள்ளன. உலகின் அபிமானத்தை வென்ற காப்புரிமை பெற்ற உள்ளாடை தயாரிப்பாக 'Cool Sensation' விளங்குகிறது. புதுமையான Touch Cool துணியானது உடல் வெப்பநிலையை 1.27˚C ஆக குறைவடையச் செய்கிறது.
அதிக ஈரப்பதன் கொண்ட இலங்கை போன்ற நாட்டிற்கு ஏற்றதாக இந்த தெரிவுகள் அமைந்;துள்ளன. குளிர்ச்சியான உணர்வை பேணும் வகையில், இந்த புதிய தெரிவுகள் அணிபவரின் இயற்கையான வளைவுகளை வெளிப்படுத்திக் காட்டக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன' என டிரையம்ப் இன்டர்நெஷனல் ஸ்ரீலங்காவின் செயற்பாட்டு தலைவர் அமல் பெர்னாண்டோ தெரிவித்தார்.
மேம்படுத்தப்பட்ட Lycra Beauty துணியின் விரிவடையும் தன்மை பெண்களுக்கு சௌகரியமானதும், சிறப்பான தோற்றத்தையும் வழங்கி புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கும் சுதந்திரமாக நடமாடுவதற்குமான வாய்ப்பை வழங்குகிறது. புதுபாணியிலமைந்த தெரிவுகளுடன் ஒன்று மற்றும் இரண்டு துண்டு ஸ்டைல்கள் கொண்ட நவீன தெரிவுகள் வழங்கப்படுவதால், அணிபவர் தாம் தேர்ந்தெடுத்த ஆடைகளுக்கு பொருத்தமாக உடனடியாக தங்கள் வளைவுகளை மேம்படுத்திக் கொள்ள முடியும். புதிய 'Cool Sensation' தெரிவுகள் மென்மையான சருமம், ஸ்மோகி ரோஸ் மற்றும் ஸ்மோக் போன்ற வர்ணத்தெரிவுகளில் விற்பனைக்குள்ளன.
'Cool Sensation' தெரிவுகள் மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்குவதுடன், உள்ளாடைத் தெரிவுகள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என கனவு காணும் பெண்களின் ஆசையை நிறைவேற்றுவதாக அமைந்துள்ளது. டிரையம்ப் புத்துருவாக்கம் மூலம் ஆதரவானதும், சௌகரியமானதுமான நெருக்கமான உள்ளாடைகள் வடிவமைக்கப்படுகின்றன.