
இலங்கையில் சுமார் 15 வருடங்களாக தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் SLIIT, மாணவர்களுக்கு கணனி, வணிக மற்றும் பொறியியல் துறைகளில் கல்வி வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் பிரித்தானியாவின் ஷெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் கேர்டின் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கான பட்டப்படிப்புகளுக்கு மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இந்த மாணவர்களை தெரிவு செய்யும் நடவடிக்கையை SLIIT இன் நிபுணத்துவம் வாய்ந்த உள்ளக விரிவுரையாளர்கள் குழுவினரால் முன்னெடுக்கப்படவுள்ளது.
SLIIT மற்றும் ஷெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகம் ஆகிய நீண்ட காலமாக பங்காண்மையை பேணி வருகிறது. இலத்திரனியல் பொறியியல் துறையில் BEng (Hons) மற்றும் ஷெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்திடமிருந்து MEng சான்றுக்கான கற்கைகளையும் வழங்கி வருகிறது. இந்த கற்கைகளை மாணவர்கள் இலங்கையில் பூர்த்தி செய்வதுடன், தமது இளமானி பட்டத்தை பிரித்தானியாவிலிருந்து பெற்றுக் கொள்வார்கள்.
இலத்திரனியல் பொறியியல் கற்கைகளுக்கான அனுமதி தகைமை என்பது கணிதம் மற்றும் பௌதீகவியல் ஆகிய பாடங்கள் உள்ளடங்கலாக க.பொ.த உயர் தரத்தில் (இலங்கை அல்லது பிரித்தானியா) மூன்று பாடங்களில் ஒரே தடவையில் சித்தியடைந்திருக்க வேண்டும். இலத்திரனியல் பொறியியல் கற்கை என்பது கணிதம் மற்றும் பௌதீக பாடங்களில் 'B' சித்தியை பெற்றிருக்க வேண்டும். முதல் 2 வருடங்களினுள் BEng இலிருந்து MEng கற்கைகளுக்கு மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
மென்பொருள் அபிவிருத்தி துறையில் உங்கள் எதிர்காலத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமாயின், மென்பொருள் பொறியியல் கற்கையில் BEng (Hons) பட்டத்தை பெற்றிருத்தல் வேண்டும். அடிப்படை மென்பொருள் பொறியியல் கொள்கைகளுக்கு முன்னோட்டமாக அமையும். இந்த கற்கையை தொடர்வதற்கு ஆர்வமாக உள்ள மாணவர்கள் க.பொ.த உயர்தர பரீட்சையில் (இலங்கை அல்லது லண்டன்) ஒரே தடவையில் சகல பாடங்களிலும் சித்தியடைந்திருக்க வேண்டும்.
மாணவர்கள் மேலதிக விபரங்களையும் விண்ணப்பப்படிவங்களையும் SLIIT இன் மாத்தறை, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல் அல்லது கொழும்பில் அமைந்துள்ளது மாலபே அல்லது கொள்ளுப்பிட்டி நிலையங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். www.sliit.lk இணையத்தளத்தினூடாக அல்லது 2413900/ 2301904 எனும் தொலைபேசி இலக்கங்களினூடாக மேலதிக விபரங்களை பெறலாம்.