2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வலுச் செயல்திறனை ஊக்குவிக்கும் UTE

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 26 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


வலுச் செயற்திறன் வாய்ந்த சாதனங்களுக்கான கேள்வி அதிகரித்துச் செல்லும் நிலையில், FS Curtis ரக air compressor களை UTE அறிமுகம் செய்துள்ளது. பிளேட்ரிக்ஸ் ஸ்போர்ட்ஸ் பார் அன்ட் கஃபே பகுதியில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் இந்த இயந்திரத்தை UTE அறிமுகம் செய்தது.
 
UTE இன் வலு கட்டமைப்புகளுக்கான பொது முகாமையாளர் மஞ்சுள விதானகே கருத்து தெரிவிக்கையில், 'Air compressors என்பது தொழிற்துறை பாவனைக்கு பன்முக செயற்பாடுகளை கொண்டுள்ளது. பல உற்பத்தியாளர்கள் compressing அல்லது வாயுவை அழுத்தத்துக்கு உள்ளாக்குவதன் மூலம் வலுவை இயக்க சக்தியாக மாற்றுவது தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். இலத்திரனியல் சாதனங்களுடன் ஒப்பிடுகையில் காற்றியக்க சாதனங்கள் வலுவை குறைந்தளவில் பயன்படுத்துகின்றன. இதன் காரணமாக பெரும்பாலான தொழிற்துறைகள் காற்றியக்க தொழில்நுட்பத்தை தமது நாளாந்த செயற்பாடுகளுக்கு பயன்படுத்தி வருகின்றன. அத்துடன் பெரும்பாலான தொழிற்துறைகள் தமது உற்பத்தி செயற்பாடுகளுக்கு compressed air செயற்பாட்டை தேவையாக கொண்டுள்ளன' என்றார்.
 
FS Curtis என்பது UTEஇன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெருமளவு கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும். குறிப்பாக அதிகரித்துச் செல்லும் வலு செலவீனங்களுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. FS Curtis' air compressor களினூடாக வலுப் பாவனை என்பது 30 வீதத்தால் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
சர்வதேச air compressor துறையில் முன்னோடியாக திகழும் FS Curtis, உலகின் முதலாவது முன் பின்னியக்க air compressor ஐ 1897 இல் அறிமுகம் செய்திருந்தது. அன்று முதல் தொடர்ந்து கண்டுபிடிப்பாளராகவும், பல பிரத்தியேகமான தயாரிப்பு உள்ளம்சங்களை கொண்ட air compressor களை வடிவமைப்பதில் ஈடுபட்டு வருகிறது. உதாரணமாக, காப்புரிமை பெற்ற 3ஆம் தலைமுறை ரொடர் வடிவமைப்பு, FS Curtis air compressor களின் உயர் தகைவு வன்கூட்டு பகுதியில் பொருத்தப்பட்டுள்ளதுடன், E-cool வடிவமைப்பின் மூலம் தொழிற்துறையில் உயர்ந்தளவு வலு செயல்திறன் உறுதி செய்யப்படுகின்றது. 
 
FS Curtis தெரிவு என்பது ISO 9001 மற்றும் 14001 எனும் தரச்சான்றுக்கு அமைவாக உற்பத்தி செய்யப்படுகின்றன.
 
மிசூரி பகுதியில் தலைமையகத்தை கொண்டுள்ளதுடன், அமெரிக்க வர்த்தக நாமமாக திகழ்ந்த போதிலும், FS Curtis சர்வதேச உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் வலையமைப்பைக் கொண்டுள்ளது. ஜேர்மனி, தாய்வான், இந்தியா, வியட்நாம் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் 11 வசதி நிலையங்களை கொண்டுள்ளது.
 
இலங்கையில் கட்டபில்லர் தயாரிப்புகளை விநியோகிப்பதில் ஏக அங்கிகாரம் பெற்ற தாபனமாக UTE திகழ்கிறது. நிர்மாண மற்றும் அகழ்வு சாதனங்கள், டீசல் மற்றும் இயற்கை வாயு என்ஜின்கள், இயற்கை வாயு டேர்பைன்கள், டீசல்-இலத்திரனியல் உந்துப்பொறிகள் மற்றும் பாரம் தூக்கும் ட்ரக் வகைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் உலகின் முன்னணி நாமமாக கட்டபில்லர் திகழ்கிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X