-ச.சேகர்
கொழும்பின் முன்னணி நட்சத்திர ஹோட்டல் தொடரான சினமன் ஹோட்டல்ஸ் அன்ட் ரிசோர்ட்ஸ் தொடரின் மற்றுமொரு புதிய உள்ளடக்கமாக சினமன் ரெட் எனும் 'Lean luxury' ஹோட்டல் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. கொழும்பு 3, ஆனந்த குமாரசுவாமி மாவத்தையில் அமையப்பெற்றுள்ள இந்த சினமன் ரெட் ஹோட்டல், நாட்டின் முதலாவது 'Lean luxury' ஹோட்டல் எனும் பெருமையையும் கொண்டமையவுள்ளது.
கொழும்பின் மையப்பகுதியில் அமைந்துள்ள சினமன் ரெட், 26 மாடிகளை கொண்டுள்ளது. இதில் 243 இடவசதிகளை கொண்ட அறைகள் காணப்படுகின்றன. ஹோட்டலின் நவீன உள்ளம்சங்களில் சுயமாக ஹோட்டலில் அனுமதி பெறுவது (Check-in) மற்றும் வெளியேறுவது (Check-out) பகுதிகளை கொண்டுள்ளது. அத்துடன் e-கொன்சேர்ஜ் சேவைகள், எந்நேரமும் சேவையிலிருக்கும் பொருள் வாங்கும் இயந்திரம் (Vending Machine), IPTV கட்டமைப்புகள் போன்றன சகல அறைகளிலும் காணப்படுகின்றன. தடங்கலில்லாத வயர்லஸ் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. வரையறையற்ற நீச்சல் தடாகத்தை இந்த ஹோட்டல் கொண்டுள்ளதுடன், மது அருந்தக்கூடிய பகுதி (roof top bar), உடற் பயிற்சி நிலையம் ஆகிய சகல அம்சங்களும் 26 ஆவது மாடியில் அமைந்துள்ளன. கொழும்பு நகரையும், இந்திய பெருங்கடலையும் 360 பாகையில் சுற்றி பார்வையிடக்கூடிய வசதிகளையும் வழங்குகிறது. 8 ஆம் மாடியில் அமைந்துள்ள பிரத்தியேகமான முறையில் வடிவமைக்கப்பட்ட ரெஸ்டொரன்ட் மற்றும் 7ஆம் மாடியில் அமைந்துள்ள தேநீர் மற்றும் கோப்பி அருந்தும் பகுதி போன்றன 'lean luxury' எனும் முறைக்கமைய அமைந்துள்ளன.
சினமன் ஹோட்டல்ஸ் அன்ட் ரிசோர்ட்ஸ் தொடரில் 13 ஹோட்டல்கள் அடங்கியுள்ளன. இதில் இரு கொழும்பு சிட்டி ஹோட்டல்களும், எட்டு ரிசோர்ட்களும் இலங்கையில் அமைந்துள்ளதுடன், மேலும் மூன்று ரிசோர்ட்கள் மாலைதீவுகளில் அமைந்துள்ளன. lean luxury வர்த்தக நாமத்தின் கீழ் சினமன் ரெட் அங்குரார்ப்பணத்துடன், இலங்கையின் ஹோட்டல் துறையில் புதிய பரிணாமத்தை சினமன் ஹோட்டல்ஸ் அன்ட் ரிசோர்ட்ஸ் தொடர் ஏற்படுத்தும்.