.jpg)
புக்கிட் தாரா, லங்கா மில்க் புட்ஸ் மற்றும் உடபுசல்லாவ பிளான்டேஷன்ஸ் ஆகியவற்றின் மீதான விலைச்சரிவுகள் காரணமாக அபவிசு மறைபெறுமதியை பதிவு செய்திருந்தது. புரள்வு பெறுமதி 1.7 பில்லியன் ரூபாவை கடந்திருந்தது. உயர் நிகர பெறுமதி வாய்ந்த மற்றும் நிறுவனசார் ஈடுபாடு லாஃவ்ஸ் காஸ் மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டளர்களின் ஈடுபாடு பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ், ஏசியா அசெட் ஃபினான்ஸ் மற்றும் சியெர்ரா கேபிளஸ் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு என்பது அக்சஸ் என்ஜினியரிங், பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் மற்றும் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டர்கள் நிகர கொள்வனவாளர்களாக பதிவாகியிருந்தனர்.
வலு மற்றும் சக்தி துறை என்பது சந்தையின் புரள்வு பெறுமதியில் உயர் பங்களிப்பை வழங்கியிருந்தது. (லாஃவ்ஸ் காஸ் பங்குகளின் பங்களிப்புடன்) இந்த துறை 3.30% சரிவை பதிவு செய்திருந்தது. லாஃவ்ஸ் பங்கொன்றின் விலை 2.80 ரூபாவால் குறைந்து 40.10 ரூபாவாக பதிவாகியிருந்தது.
வங்கி, நிதியியல் மற்றும் காப்புறுதித் துறை என்பது சந்தையின் புரள்வு பெறுமதியில் இரண்டாவது உயர் பங்களிப்பை வழங்கியிருந்தது. (பீபிள்ஸ் லீசிங் ஃபினான்ஸ் மற்றும் சம்பத் வங்கி பங்குகளின் பங்களிப்புடன்) இந்த துறை 2.56% சரிவை பதிவு செய்திருந்தது. பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பங்கொன்றின் விலை 1.20 ரூபாவால் குறைந்து 22.80 ரூபாவாக பதிவாகியிருந்தது. சம்பத் வங்கி பங்கொன்றின் விலை 1.40 ரூபாவால் குறைந்து 233.00 ரூபாவாக பதிவாகியிருந்தது.
அக்சஸ் என்ஜினியரிங் மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளும் புரள்வு பெறுமதியில் உயர் பங்களிப்பை வழங்கியிருந்தன. அக்சஸ் என்ஜினியரிங் பங்கொன்றின் விலை 2.20 ரூபாவால் குறைந்து 37.10 ரூபாவாக பதிவாகியிருந்தது. ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பங்கொன்றின் விலை 2.10 ரூபாவால் குறைந்து 70.00 ரூபாவாக பதிவாகியிருந்தது.