2026 ஏப்ரல் 24, வெள்ளிக்கிழமை

சர்வதேச பல்மருத்துவ மாநாட்டில் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் 3M

A.P.Mathan   / 2013 ஜூன் 29 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


3M ESPE நிறுவனமானது இம் மாதம் 27ஆம் திகதி தொடக்கம் ஜூலை 1ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாடு மற்றும் SLDA 80ஆவது வருடாந்த கூட்டத்தொடரிற்கு SLDA உடன் கைகோர்த்துள்ளது. முதற்தடவையாக சர்வதேச பல்மருத்துவ சம்மேளனம் (FDI) மற்றும் பொதுநலவாய பல்மருத்துவ சங்கம் (CDA) ஆகியவற்றுடன் இணைந்து இலங்கை பல்மருத்துவ சங்கம் (SLDA) இந் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.
 
மாநாட்டின் தொனிப்பொருளாக 'பல் மற்றும் வாய்ச்சுகாதார பராமரிப்பு குறித்த புதிய சவால்கள்' அமைந்துள்ளதுடன், இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள துறைசார் நிபுணர்களை ஒன்றிணைத்து அவர்களின் அனுபவம், தகவல் மற்றும் பல் மருத்துவத்தில் நவீன அறிவியல் வளர்ச்சிகள் குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. இவ் அறிவியல் கூட்டத்தொடரில் Dental Implantology> Fixed Prosthesis, Aesthetic Dentistry, Endodontics, பற்சீரமைப்பு (Orthodontics), Ceramics, நவீன Periodontology, வாய் நோய்கள் மற்றும் சிறியளவிலான வாய் அறுவை சிகிச்சைகள் போன்ற தலைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 5 நாட்கள் நடைபெறவுள்ள இக் கூட்டத்தொடரின் விரிவுரைகள், symposia, கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகள் ஆகியவற்றில் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நிபுணர்கள் புதிய தகவல்கள் மற்றும் தொழில்நுட்பம் குறித்த விளக்கங்கள் வழங்கவுள்ளனர். 
 
இம் மாநாடு குறித்து 3M லங்கா(பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் சுகாதார பராமரிப்பு பிரிவின் முகாமையாளர் சன்ஜய ரேக்காவ தெரிவிக்கையில், 'இச் சர்வதேச மாநாடானது ஒட்டுமொத்த பல்மருத்துவ துறைக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது. இந்த அறிவியல் கூட்டத்தொடரில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்கள் மற்றும் அனுபவங்கள் அனைத்தும் பல்மருத்துவ துறை நிபுணர்களின் முன்னேற்றத்திற்கு வித்திடும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. 3M ஆனது பாவனையாளர்கள் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு சிறந்த தரத்திலான புத்துருவாக்க வாய்ச் சுகாதார தயாரிப்புக்களை விநியோகிக்கும் நிறுவனமாகும். ஆகவே, இம் முக்கியமான நிகழ்விற்கு SLDA, FDI மற்றும் CDA ஆகியவற்றுடன் கைகோர்த்துள்ளமை குறித்து மகிழ்ச்சியடைவதுடன், வாய்சுகாதார துறையின் அபிவிருத்திக்கான எமது ஆதரவினை விரிவுபடுத்தவுள்ளோம்' என்றார். 
 
இலங்கை பல்வைத்திய சங்கத்தின் தலைவர் டாக்டர் சுரேஷ் சண்முகநாதன் கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையில் நடைபெறவுள்ள பல்மருத்துவ சங்கத்தின் 80வது ஆண்டு நிறைவின் வருடாந்த கூட்டத்தொடரை FDI/CDA/SLDA ஒன்றிணைந்து நடத்தும் முதல் சர்வதேச மாநாடு இதுவாகும். 'இச் சர்வதேச மாநாட்டிற்கு 3M ஆனது எம்முடன் இணைந்துள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகிறோம். 3M நிறுவனமானது தனது தரம் வாய்ந்த மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கள் மூலம் சர்வதேச ரீதியில் பல்மருத்துவ துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகிறது. இச் சர்வதேச மாநாட்டிற்கான 3M இன் பங்காண்மை மூலம் பல்மருத்துவ துறை வளர்ச்சிக்கான அதன் அர்ப்பணிப்பு வெளிப்படுகின்றது' என மேலும் தெரிவித்தார். 
 
இம் மாநாட்டில் டாக்டர் அரவிந்த் ஷெனொய் (BDS, MDS மும்பை பல்கலைக்கழகம் - இந்தியா) “Smile Designing - Restorative Management of the Anterior Dentition” தொடர்பாக உரை நிகழ்த்தவுள்ளார். மேலும் மாநாட்டிற்கு நடைபெற முன்னதாக அதே தலைப்பின் கீழ் முழுநாள் பயிற்சி பட்டறையை அவர் முன்னெடுக்கவுள்ளார். மேலும், இம் மாநாட்டில் பங்கேற்கும் பல்மருத்துவ நிபுணர்களிற்கு இக் கூட்டத்தொடரில் காட்சிப்படுத்தவுள்ள 3M இன் நவீன கண்டுபிடிப்புகளை கண்டுகளிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  
 
3M ESPE ஆனது பல் மருத்துவ துறை சார்ந்த புதிய யோசனைகளுக்காக உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாகும். தொடர்ச்சியாக எட்டாவது வருடமாக சர்வதேச ரீதியில் மிகச் சிறந்த பல்மருத்துவ புத்துருவாக்க நிறுவனம் எனும் நற்பெயரை பெற்றுள்ளது. தமது உற்பத்தி மற்றும் சேவைகள் வரிசையில் சீரமைப்பு, crown மற்றும் bridge, உட்பொருத்தல், தடுப்பு மற்றும் ஒப்பனை பல் அலங்காரம் போன்றவற்றை கொண்டுள்ளதுடன், மேலதிகமாக டிஜிடல் வாய் பராமரிப்பு பிரிவின் மூலமும் CAD/CAM மற்றும் டிஜிடல் அழுத்தங்கள் மூலமும் அதிநவீன டிஜிடல் தொழில்நுட்பம் மற்றும் மூலப்பொருட்கள் ஒன்றிணைக்கப்படுகிறது. மேலும் 3M மூலம் பல்மருத்துவ துறைக்கு முதல் சுய உலகளாவிய பிசின் சீமென்ட், nano ionomer, malleable, preformed temporary crown, automated mixing of impression materials மற்றும் உலகளாவிய பிணைப்பு தீர்வுகள் போன்றவற்றை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 3M இன் உற்பத்தி வரிசையில் 3M™ ESPE™ Filtek™,  3M™ ESPE™ Impregum™, 3M™ ESPE™  Pentamix™,3M™ ESPE™ RelyX™, 3M™ ESPE™ Sof-Lex™, 3M™ ESPE™  Adper™, 3M ESPE™ Ketac glass, 3M™ ESPE™ Imprint™ 3 போன்ற நம்பகமான வர்த்தகநாமங்கள் உள்ளடங்குகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .