.jpg)
யாழ்ப்பாணத்தில் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் சர்வதேச கண்காட்சி எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் 23 – 25 வரையிலான காலப்பகுதியில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. தொடர்ச்சியான ஆறாவது தடவையாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் முதலீட்டாளர்கள், வியாபார பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் சந்திக்கும் நிகழ்வாக இந்த கண்காட்சி அமைந்துள்ளதுடன், வெளி பிரதேசங்களிலிருந்து யாழ்ப்பாணத்தில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வியாபார பிரமுகர்களை கவர்ந்திழுக்கும் ஒரு கண்காட்சியாகவும் அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு இடம்பெற்ற கண்காட்சியின் போது பெருமளவான பார்வையாளர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், காட்சிகூடங்களை சேர்ந்தவர்களுக்கு தாம் எதிர்பார்த்ததை விட பெருமளவானோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த பிரதேசம் தற்போது பாரியது உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களை எதிர்நோக்கிய வண்ணமுள்ளது.
இம்முறை நடைபெறவுள்ள கண்காட்சியின் போது நிர்மாணத்துறை, விருந்தோம்பல் துறை, உணவு, பானம் மற்றும் பொதியிடல் துறை, வாகனத்துறை, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறை, நிதிச் சேவைகள் துறை, ஆடைத்துறை, விவசாயத்துறை, நுகர்வோர் பொருட்கள் துறை மற்றும் மேலும் பல துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
”இந்தளவு பிரம்மாண்டமாக யாழ்ப்பாண பிராந்தியத்தில் வேறெந்த கண்காட்சி நிகழ்வும் ஏற்பாடு செய்யப்படுவதில்லை. சகல வியாபாரங்களும், உள்நாட்டவர்களும் இந்த கண்காட்சி தொடர்பில் அதிகளவு ஆர்வம் செலுத்துகின்றனர். இந்த பிராந்தியத்தை சேர்ந்தவர்களுக்கும், நாட்டின் ஏனைய பிரதேசங்களை சேர்ந்தவர்களுக்கும் சிறந்த சந்திப்பு பகுதியாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது. எனவே இந்த கண்காட்சிக்கு விஜயம் செய்யும் ஒவ்வொரு நபரும், அதிகளவு பயனை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்து வருகை தருகின்றனர்” என யாழ்ப்பாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் கே.விக்னேஷ் தெரிவித்தார்.