2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பு 7 இலுள்ள தனது 293 பேர்ச் காணியை விற்க ஆசிரி ஹொஸ்பிட்டல்ஸ் முடிவு

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு 7, ஹோர்டன் பிளேஸில் அமைந்துள்ள 293 பேர்ச் காணியை விற்பனை செய்ய ஆசிரி ஹொஸ்பிட்டல்ஸ் முன்வந்துள்ளது. இதற்கான அனுமதியை தனது பங்குதாரர்களிடமிருந்து பெற்றுள்ள குறித்த நிறுவனம், விற்பனைக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையிலும் கைச்சாத்திட்டுள்ளது.
 
2.6 பில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ள இந்த காணியின், ஒரு பேர்ச் விலை 9 மில்லியன் ரூபாவாக அமைந்துள்ளது. 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் 185 க்கு அமைய இடம்பெறவுள்ள மாபெரும் கொடுக்கல் வாங்கலாக இது அமைந்துள்ளது. 
 
கொள்வனவு செய்யும் நபர் குறித்த விபரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X