Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 நவம்பர் 06 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சருமம் மற்றும் அழகு பராமரிப்பு துறையில் முன்னோடியாக விளங்கும் ஆல My Chemist குழுமமானது 'Mangala Mohotha மணப்பெண் அலங்கார நிகழ்வு 2015' இன் பிரதான அனுசரணையாளர்களுள் ஒன்றாக கைகோர்த்துள்ளது. இந்த மணப்பெண் அலங்கார நிகழ்வு தொடர்ச்சியாக 2ஆவது ஆண்டாக எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு கலதாரி ஹோட்டலில் இடம்பெறவுள்ளது. இந் நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த புகழ்பெற்ற அழகுகலை நிபுணர்கள் பங்கேற்கவுள்ளனர். இந் நிகழ்வுக்கான அனுமதிகட்டணம் ரூ.3500 ஆக உள்ளதுடன், இல.41 ரிட்ஜ்வே பிளேஸ், கொழும்பு 04 எனும் முகவரியில் அமைந்துள்ள இலங்கை சிகையலங்கரிப்பாளர்கள் மற்றும் அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியம் (SLAHAB) இன் தலைமை அலுவலகத்தில் கொள்வனவு செய்துகொள்ள முடியும்.
SLAHAB மூலம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் நாட்டின் முன்னணி வடிவமைப்பாளர்கள், கூந்தல், ஒப்பனை மற்றும் அழகுக்கலை நிபுணர்களின் நவீன திருமண வடிவமைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. கொக்டேல் விருந்தினை தொடர்ந்து பேஷன் ஷோ அணிவகுப்பு இடம்பெறவுள்ளது.
'Mangala Mohotha மணப்பெண் காட்சி 2015 நிகழ்வின் பிரதான அனுசரணையாளர்களுள் ஒன்றாக My Chemist குழுமம் இருப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களின் 'Dermacolor' மற்றும் 'Basicare' ஆகிய இரு வர்த்தகநாமங்களும் உள்நாட்டு மணப்பெண் அலங்கார துறையில் மிகவும் புகழ்பெற்று விளங்குகின்றன. 'Dermacolor' என்பது நீடித்ததாகவும், weatherproof ஆகவும் உள்ளதுடன், smear proof camouflage ஒப்பனை தெரிவுகள் இன்றைய மணப்பெண்களுக்கு அவர்களின் திருமண தினத்தன்று இயற்கையான தோற்றத்தையும், 'Basicare' ப்ளென்ட் ஒப்பனை தெரிவுகள் மணப்பெண்ணுக்கு நேர்த்தியான தோற்றத்தையும் வழங்குவதாக அமைந்துள்ளது' என SLAHAB இன் ஸ்தாபகரும், தலைவருமான நயனா கருணாரத்ன தெரிவித்தார்.
2014 நிகழ்வின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த வருட நிகழ்வில் 40-45 வரையான முன்னணி வடிவமைப்பாளர்கள், சிகை, ஒப்பனை மற்றும் அழகுக்கலை வல்லுநர்கள் தத்தமது 2015 தெரிவுகளை காட்சிப்படுத்தவுள்ளனர். மேலும் இந் நிகழ்வில் கண்டியன், இந்தியன் மணப்பெண் அலங்கார பாணிகளும், இந்து மற்றும் முஸ்லீம் கலாச்சாரங்களுக்கேற்ற மணப்பெண் அலங்காரங்களும் வெளிப்படுத்தப்படவுள்ளன.
இந்த ஒன்றிணைவு குறித்து My Chemist இன்டர்நெஷனல் நிறுவனத்தின் பணிப்பாளர் சரத் ஜயசேகர கருத்து தெரிவிக்கையில், 'Mangala Mohotha 2015 நிகழ்வின் பிரதான அனுசரணையாளர்களாக இருப்பதன் ஊடாக இலங்கையின் மணப்பெண் அலங்காரத்துறைக்கு பங்களிப்பு வழங்குவதையிட்டு My Chemist குழுமம் பெரிதும் மகிழ்ச்சியடைகிறது. My Chemist குழுமத்தின் இரு முன்னணி வர்த்தகநாமங்களான 'Dermacolor' மற்றும் 'Basicare' போன்றன இலங்கையின் மணப்பெண் அலங்காரத் துறையுடன் ஒன்றிணைந்துள்ளது. சருமம் மற்றும் அழகு பராமரிப்பில் விசேட தெரிவுகளை கொண்ட இவ்விரு வர்த்தகநாமங்களுமே எந்தவொரு மணப்பெண் தோற்றத்திற்கும் நேர்த்தியை வழங்குவதாக அமைந்துள்ளது. இந்த வடிவமைப்புகள் மற்றும் தோற்றங்கள் இன்றைய கால மணப்பெண்களின் தேவைகளுக்கேற்ப உருவாக்கப்பட்டுள்ளன' என்றார்.
கடந்த தசாப்தங்களில் நாம் பெற்றுக்கொண்ட தேர்ச்சியுடன் My Chemist குழுமமானது உள்நாட்டு வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை நன்கு புரிந்து கொண்டுள்ளது. புதுமையான சரும மற்றும் அழகு பராமரிப்புச் சாதனங்கள் இத்துறையில் எழும் உலகளாவிய போக்குகளுக்கமைய ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. சரும பராமரிப்பு மற்றும் அழகு பராமரிப்பு சாதனங்களின் பரந்துபட்ட தெரிவுகள் தர நியமங்களுக்கமைய உருவாக்கப்பட்டுள்ளன.
46 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago