2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

῾Pepsimoji’ இன் வெற்றியாளர்கள் அறிவிப்பு

Gavitha   / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வருண் பெவரேஜஸ் லங்கா பிரைவெட் லிமிட்டெட்டினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருந்த “Pepsimoji” போட்டியின் வெற்றியாளர்களின் விவரங்களை நிறுவனம் வெளியிட்டுள்ளது.  

இதில் பங்குபற்றுவதற்காக 500 மி.லீ. பெப்சி “Single Serve” போத்தல்கள் மற்றும் 1 லீற்றர் மற்றும் 2 லீற்றர் PET பெப்சி போத்தல்கள் ஆகியவற்றை கொள்வனவு செய்யும் போது, போத்தல் மூடியின் கீழ் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள குறியீட்டு இலக்கத்தை லேபிளில் வழங்கப்பட்டிருந்த அலைபேசி இலக்கத்துக்கு sms செய்ய வேண்டியிருந்தது. sms கிடைத்தவுடன், போட்டியாளருக்கு இந்தப் போட்டியில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததுடன், இந்த ஊக்குவிப்பு காலம் நிறைவடைந்த பின்னர், சகல sms களும் கணினி மென்பொருள் கட்டமைப்பொன்றினூடாக செலுத்தப்பட்டு வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.  

மொத்தமாக 37 பிரிவு அடிப்படையிலான பரிசுகள் வழங்கப்பட்டிருந்தன. இதில் Macbook, இருவருக்கு மாலைதீவுகள், இபிஸா, லாஸ் வெகாஸ் சென்று திரும்புவதற்கான வாய்ப்பு, உணவகங்களுக்கான வவுச்சர்கள், லசித் மலிங்க உடன் சந்திப்பு மற்றும் கொழும்பு இசை வைபவத்தில் பங்குபற்றுவதற்கான இரு டிக்கெட்கள் போன்றன வழங்கப்பட்டிருந்தன.  

“Feeling Happy” பிரிவில் வெற்றியீட்டியவர்களுக்கு- Macbook வழங்கப்பட்டிருந்ததுடன் “Cricket Crazy” பிரிவில் வெற்றியீட்டியவர்களுக்கு லசித் மாலிங்கவை சந்திப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இவர்களுக்கான பரிசுகளை பிரதம நிறைவேற்று அதிகாரி அஜய் பார்தியா, சந்தைப்படுத்தல் மற்றும் பிரதான கணக்குகளின் பொது முகாமையாளர் துலனீ வீரக்கொடி மற்றும் விற்பனை பிரிவின் பொது முகாமையாளர் இரங்க தர்மவர்தன ஆகியோர் வழங்கியிருந்தனர்.  

சந்தைப்படுத்தல் மற்றும் பிரதான கணக்குகளின் பொது முகாமையாளர் துலனீ வீரக்கொடி கருத்துத் தெரிவிக்கையில், “இந்தப் போட்டியின் பெறுபேறுகள் குறித்து நாம் மிகவும் திருப்தியடைகிறோம். குறிப்பாக நகரங்களில் பெப்சி வர்த்தக நாமத்துக்கு நுகர்வோர் மத்தியிலிருந்து காணப்படும் வரவேற்பு மற்றும் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நாமத்துக்கு பெறுமதி மற்றும் நாட்டம் காணப்படுகின்றமை புலப்பட்டிருந்தது. நுகர்வோரிடமிருந்து உறுதியான கேள்வி காணப்பட்ட நிலையில், நாம் எதிர்வரும் காலங்களில் எமது தயாரிப்புக்கு ஆரோக்கியமான பெறுமதி வளர்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X