2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இன்டர்பார்மின் cephalosporin antibiotics உற்பத்தி நிலையம்

A.P.Mathan   / 2014 ஜூலை 28 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


முன்னணி மருந்தாக்கல் நிறுவனமான இன்டர்பார்ம் (பிரைவேற்) லிமிடெட், இலங்கையின் முதலாவதும் ஒரே நவீன வசதிகள் படைத்த cephalosporin antibiotics உற்பத்தி நிலையத்தை நிறுவியுள்ளது.  இந்த நவீன வசதிகள் படைத்த உற்பத்தி நிலையம் மடபாத்த, பிலியந்தல பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தை இன்டர்பார்ம் நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான கலன ஹேவமல்லிக அங்குரார்ப்பணம் செய்திருந்தார்.
 
இன்டர்பார்ம் என்பது கெமா பார்மசியுட்டிகல்ஸ் பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தின் உறுப்புரிமை நிறுவனமாகும். இந்த புதிய cephalosporin antibiotics மருந்தாக்கல் நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலன ஹேவமல்லிக உரையாற்றுகையில், 1992 ஆம் ஆண்டு அவரின் காலம் சென்ற தந்தை காமினி ஹேவமல்லிக கெமா பார்மசியுட்டிகல்ஸ் நிறுவனத்தை அங்குரார்ப்பணம் செய்திருந்ததை நினைவு கூர்ந்திருந்தார். 'அமெரிக்காவை தளமாக கொண்டியங்கிய பல்தேசிய நிறுவனத்தின் அங்கத்துவ நிறுவனமான வோர்னர் லெம்பர்ட் லங்கா (பிரைவேற்) லிமிடெட் நிறுவனத்தை கையகப்படுத்தியிருந்ததுடன் இந்த நிறுவனம் தாபிக்கப்பட்டிருந்தது. வோர்னர் லெம்பர்ட் மற்றும் பார்கே டேவிஸ் வர்த்தக நாமங்களை இலங்கையில் உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதற்கான அனுமதியும் அங்கத்துவமும் எமக்கு வழங்கப்பட்டது. அவற்றின் உற்பத்தி செயற்பாடுகளின் போதும் சந்தைப்படுத்தல் செயற்பாடுகளின் போதும் அவசியமான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கான கொடுப்பனவுகளை நாம் அவர்களுக்கு மேற்கொண்டிருந்தோம்' என்றார்.
 
'இன்று நாம் நீண்ட தூரம் பயணித்துள்ளோம். கெமா பார்மசியுட்டிகல்ஸ் கடந்த தசாப்த காலங்களில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன் உறுப்புரிமை நிறுவனமான இன்டர்பார்ம் தனது வர்த்தக செயற்பாடுகளை 1995 இல் ஆரம்பித்திருந்தது. இந்நிறுவனம்;, சுகாதார சேவைகள் பணிப்பாளரின் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் சர்வதேச விலைமனுக்கோரல்களில் பங்கேற்று, பின்னர் 2005 இல் இலங்கையில் தனது வர்த்தக நாமங்களை அறிமுகம் செய்திருந்தது. தற்போது Cephalosporinsகளை உற்பத்தி செய்வதற்கான நவீன இயந்திரங்களையும், நவீன ஆய்வுகூட சாதனங்களையும் தொழில்நுட்ப ரீதியில் ஆளுமை படைத்த நிபுணர்களை கொண்ட முதலாவதும் ஒரே ஊcephalosporin antibiotics உற்பத்தி நிலையம் எம்மிடம் ; நவீன வசதிகளுடன் உள்ளது' என்றார்.
 
ஹேவமல்லிக தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'கெமா பார்மசியுட்டிகல்ஸ் மற்றும் இன்டர்பார்ம் ஆகிய நிறுவனங்கள் 'மஹிந்த சிந்தனை – தூரநோக்கம்' என்பதற்கு அமைய உள்நாட்டில் சர்வதேச தரத்துக்கு அமைய மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வது என்பதற்கு அமைவாக தமது உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. இதன் மூலம் வெளிநாட்டு நாணயமாற்று வீதத்தை குறைக்க முடியும் என்பதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்க முடியும்' என்றார்.
 
'தற்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மற்றும் அவ்அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரின் மூலம் எமது செயற்பாடுகளுக்கு பூரண ஆதரவு கிடைத்த வண்ணமுள்ளது. குறிப்பாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு மற்றும் தொழிற்துறை மற்றும் வணிக அமைச்சு ஆகியவற்றின் மூலம் எமக்கு ஒத்துழைப்பு கிடைத்த வண்ணமுள்ளது. சிறந்த ஆதரவு மற்றும் ஊக்குவிப்பு போன்றன நம்மை சிறப்படையச் செய்கின்றன. எமது தொனிப்பொருளான 'தரமான சுகாதார பராமரிப்பை அனைவருக்கும் வழங்குவதற்கான பங்களிப்பில் சிறப்புத் தேர்ச்சியை எய்துவது' என்பதற்கு அமைவாக, உள்நாட்டு தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் தேசிய வைத்தியசாலைகளுக்கு அவசியமான மருந்துப் பொருட்களை வழங்கி வருகிறோம். அத்துடன் நேரடியாக சந்தைகளுக்கும் சகாய விலையில் மருந்துப் பொருட்களை விநியோகிக்கிறோம்' என்றார்.
 
கெமா பார்மசியுட்டிகல்ஸ் பிரைவேற் லிமிடெட்டில், 42 பேரை கொண்டு எமது செயற்பாடுகளை ஆரம்பித்து, இன்டர்பார்முடன் உறுதியான முறையில் எமது செயற்பாடுகளை விஸ்தரித்து, ஊழியர்களின் எண்ணிக்கையை பலடங்கு அதிகரித்துள்ளோம். கெமா மற்றும் இன்டர்பார்ம் ஆகியவற்றின் உற்பத்தி வசதிகள் மற்றும் உற்பத்தி செயற்பாடுகள் போன்றன காலாகாலத்தில் உலக சுகாதார தாபனத்தின் வழிகாட்டல்களுக்கு அமைய மெருகேற்றம் செய்யப்பட்ட வண்ணமுள்ளன. நவீன வசதிகள் படைத்த சாதனங்களான தன்னியக்கமான டுLiquid Filling machinery, Tableting machines, Coating machine, Capsule Filling machine மற்றும் நவீன ஆய்வு கூட உபகரணங்கள் போன்றன எமது பொருட்களின் தரத்தை சர்வதேச மட்டத்தில் பேணுவதை உறுதி செய்துள்ளன. கெமா பார்மசியுட்டிகல்ஸ் மற்றும் இன்டர்பார்ம் ஆகியன தமது உற்பத்தி பொருட்கள் மீது கடுமையான தர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.
 
எமது பிரதான பெறுமதிகளான மக்களின் நலன் மற்றும் இயற்கைக்கு நட்புறவான செயற்பாடு என்பதற்கு அமைவாக, நாம் செயற்படுத்தும் கழிவு நீர் முகாமைத்துவ கட்டமைப்புக்காக சூழலுக்கு பாதுகாப்பான சான்றிதழ்கள் கெமா பார்மசியுட்டிகல்ஸ் மற்றும் இன்டர்பார்ம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளன. 
 
இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் விசேட விருதுகள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர் விருதுகளை தொடர்ச்சியான இரு ஆண்டுகள் இன்டர்பார்ம் (பிரைவேற்) லிமிடெட் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X