2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஒரக்கள் E- Business Suite 12 தீர்வுகள்

A.P.Mathan   / 2014 ஜூன் 26 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


நாடு முழுவதிலும் கிளைகளைக் கொண்டதும், கொழும்பு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமான HNB அஷ்யூரன்ஸ் தனது வர்த்தக செயற்பாடுகளை மேலும் ஒன்றிணைந்து ஒழுங்குபடுத்தும் வகையில் Oracle E- Business Suite 12 தீர்வுகளை அறிமுகம் செய்துள்ளது.
 
இந்த புதிய அறிமுகம் என்பது, HNB அஷ்யூரன்ஸுக்கு நேரம் தாழ்த்தாமல், மிகவும் துல்லியமான தரவுகளை பெற்றுக் கொள்வதற்கும், துரிதமான வர்த்தக தீர்மானங்களையும் மேற்கொள்வதற்கு ஏதுவாக அமைந்திருக்கும் அதேவேளை, செயற்பாடுகளை தன்னியக்கமாக இயங்கச் செய்து, ஊழியர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கும்.
 
Oracle E-Business Suite தீர்வுகளை அறிமுகம் செய்யும் முன்னர், HNB அஷ்யூரன்ஸ் பாரம்பரியமான நிதியியல் கட்டமைப்பை பயன்படுத்தியிருந்தது, இதற்கமைய பெரும்பாலான அறிக்கையிடல் செயற்பாடுகள் மனித உட்படுத்தல்களின் மூலம் மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்பட்டது. அத்துடன் ஒன்றிணைப்பு செயற்பாடு என்பது மிகவும் சிக்கல் நிறைந்த செயற்பாடாக அமைந்திருந்ததுடன், இந்த செயற்பாடுகளை நிறைவேற்ற அர்ப்பணிப்பான மேலதிக வளங்களை உட்படுத்த வேண்டிய தேவையும் காணப்பட்டது.
 
Oracle E Business Suite இனை செயற்படுத்தியிருந்ததன் மூலம், தரவுகளை கையகப்படுத்தவும், செயற்படுத்தவும் உயர் வினைத்திறன் வாய்ந்த, தங்கியிருக்கக்கூடிய மற்றும் அளவிடக்கூடிய enterprise resource planning (ERP) கட்டமைப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பு என்பது நிர்வாகத்துக்கு அவசியமான அசல் நேர மற்றும் துல்லியமான தரவுகளை விரைவாக பெற்றுக் கொள்ளவும், தீர்மானங்களை துரிதமாக மேற்கொள்ளவும் உதவியாக அமைந்துள்ளது.
 
HNB அஷ்யூரன்ஸின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைமை அதிகாரி நாமல் குணவர்தன கருத்து தெரிவிக்கையில், 'நாம் ஒரக்கள் தீர்வுகளை சுமார் 10 வருடங்களாக பயன்படுத்தி வருகிறோம். Oracle E-Business Suite உடன் நாம் எமது உட்கட்டமைப்பு மற்றும் ஆப்ளிகேஷன்களுக்கு சிறந்த பொருத்தங்களை வழங்குவதாக அமைந்துள்ளது. செலவு சிக்கனத்துடன், உச்ச பயனை பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகளையும் வழங்குகிறது' என்றார்.
 
HNBA தனது வர்த்தக செயற்பாடுகளுக்காக Oracle E-Business Suite Financials களை அறிமுகம் செய்வதன் மூலம் தனது சிக்கனமான செயற்பாட்டை மேலும் உறுதி செய்துள்ளதுடன், பின்புல செயற்பாடுகளின் செலவீனங்களை குறைக்கும் வகையில் அமைந்துள்ளது. நியமப்படுத்தப்பட்ட செயற்பாடுகளின் மூலமாக பகிரப்பட்;ட சேவைகள், உற்பத்தித்திறன் சார்ந்த சாதனங்கள் மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட வினைத்திறன் முகாமைத்துவ செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையிலும், கணக்கியல் தராதரங்கள் மற்றும் கொள்கைகள் போன்றன கூட்டாண்மை முகாமைத்துவ செயற்பாடுகளை மேற்கொள்ள உதவியாக அமைந்துள்ளது.
 
HNB அஷ்யூரன்ஸ் 'strategy of zero customization' என்பதற்கமைவாக செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. Oracle E-Business Suite மற்றும் அதன் செயற்பாடுகள் போன்றன Oracle E-Business Suite  செயற்பாடுகளுக்கு உதவும் வகையில் இது அமைந்துள்ளது.
 
ஒரக்கள் பங்காண்மை வலையமைப்பின் பிளாட்டினம் அங்கத்தவரான MillenniumIT நிறுவனத்துக்கு, இந்த தீர்வை செயற்படுத்துவதற்கான ஒப்பந்தம் 2013 ஒக்டோபர் மாதமளவில் வழங்கப்பட்டிருந்தது. 2014 ஜனவரியில் இந்த தீர்வுகளை செயற்படுத்தியிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X