2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

1 மில்லியன் இல்லங்களில் டயலொக் டெலிவிஷனின் சேவை

Editorial   / 2018 மே 14 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் முன்னணி PAY TV தொலைக்காட்சி சேவை வழங்குநரான டயலொக் டெலிவிஷன், 1 மில்லியன் இல்லங்களில் தன் சேவையை வழங்கி வருகின்றது. 

டயலொக் டெலிவிஷன் இந்த மைல்கல் சாதனையை கொண்டாடும் முகமாக, தற்போதைய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கடந்த மாதம் 18ஆம் திகதி வரை மேலதிக கட்டணங்களின்றி HD செனல்கள் உட்பட அனைத்து செனல்களையும் பார்வையிடும் சலுகையை வழங்கியிருந்தது.

இதற்கு மேலதிகமாக, வாடிக்கையாளர்களுக்கு பக்கேஜ் சலுகைகளை நீடித்துள்ளதுடன், மேலதிகக் கட்டணங்களின்றி சிறந்த சர்வதேச HD செனல்கள் சிலவற்றையும் செயற்படுத்திவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச்சலுகைகள் வெறுமனே பெரியவர்களுக்கு மட்டுமன்றி, ஏப்ரல் 21 மற்றும் 22ஆம் திகதிகளில், கார்ட்டூன் நெட்வேர்குடன் இணைந்து எற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வின்போதும், அவர்களுக்கு பிடித்தமான கார்டூன் நட்சத்திரங்களை சந்தித்து பழகும் வாய்ப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும், ஒரு மில்லியனாவது வாடிக்கையாளருக்கு மாத வாடகை முற்றிலும் இலவசமாக்கப்பட்ட டயலொக் டெலிவிஷன் சேவையுடன், சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கிட, 49அங்குல LED டிவி ஒன்றும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. 

டயலொக் டெலிவிஷன் சேவையானது, 2007ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின்னர் இலங்கையில் Pay Television துறையில் புரட்சியை ஏற்படுத்தியிருந்ததுடன், நாளாந்த பட்டியலிடும் வசதியை வழங்கிய முதலாவது சேவை வழங்குநராகவும் தனது நாமத்தை பதித்துக்கொண்டது.

இப்புதுமையான Pay-as-you-watch (பார்வையிடும் செனல்களுக்கு மட்டும் செலுத்தும் சலுகை) பெக்கேஜ், முன்னணியான உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளதுடன்,  இலங்கையர் ஒவ்வொருவருக்கும் செட்லைட் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கிய நிறுவனம் என்று அனைவரினதும் பாராட்டையும் பெற்றுக்கொண்டது. 

இந்த சாதனை தொடர்பாக கருத்து தெரிவித்த, டயலொக் டெலிவிஷனின் தலைவரான சிராந்த டி சொய்சா, “நாடுமுழுவதும் தொலைதூரங்களிலுள்ள அத்தனை பேருக்கும், உலகலாவிய உள்ளடக்கங்களை கொண்ட தரமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கிட முயற்சிசெய்த வண்ணமேயுள்ளோம்.

இலங்கையில் டிஜிட்டல் பொழுதுபோக்குத் துறை எவ்வாறு மாற்றங்கண்டுள்ளது என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது. டயலொக் டெலிவிஷனானது இல்லங்களில் மட்டுமன்றி வைத்தியசாலை மற்றும் 10,000 இற்கும் மேற்பட்ட தொடர்மாடிக் குடியிருப்பு வீடுகளுக்கும் தன் சேவையை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது” என்று கூறினார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .