2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

1.8 பில்லியன் ரூபா முதலீட்டில் காலியில் புதிய ஹோட்டல்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 22 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

1.8 பில்லியன் ரூபா முதலீட்டில் காலி நகரில் 100 அறைகளை கொண்ட நட்சத்திர சொகுசு ஹோட்டல் ஒன்றை நிர்மாணிக்க ஏசியா கெப்பிட்டல் நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த ஹோட்டலை நிர்மாணிப்பதற்கான முதலீடுகளை ஏசியா கெப்பிட்டல் நிறுவனம் மற்றும் ஜப்பான் நாட்டின் இரு புதிய முதலீட்டாளர்கள் மேற்கொள்ள முன்வந்துள்ளனர்.
 
இந்த ஆண்டின் இறுதிப்பகுதியளவில் இந்த ஹோட்டல் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், 2016 ஆம் ஆண்டளவில் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 1.8 பில்லியன் ரூபாவில், 1.2 பில்லியன் ரூபா நிர்மாணப்பணிகளுக்காகவும், 0.6 பில்லியன் ரூபா உள்ளக அலங்கார வடிவமைப்புகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இந்த ஹோட்டலை தொடர்ந்து, மேலும் மூன்று ஹோட்டல்களை தெற்கு கரையோர பகுதியில் நிர்மாணிக்க ஏசியா கெப்பிட்டல் தீர்மானித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X