2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

20 வருட பூர்த்தியை கொண்டாடும் ஜனசக்தி இன்சூரன்ஸ்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 29 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


காப்புறுதி துறையில் முன்னோடியாக திகழும் ஜனசக்தி இன்சூரன்ஸ், காப்புறுதி துறையில் பிரவேசித்து 20 வருடங்களை பூர்த்தி செய்துள்ளதை கொண்டாடுகிறது. 
 
2013 ஆம் ஆண்டில், கம்பனி 1 பில்லியன் ரூபாவை வரிக்கு பிந்திய இலாபமாக பதிவு செய்திருந்தது. அத்துடன் தொகுக்கப்பட்ட வருமானமாக 9.9 பில்லியன் ரூபாவை அல்லது 20மூ வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. 
 
இந்த உறுதியான பெறுபேறுகளுடன், ஜனசக்தி இன்சூரன்ஸ், சாதாரண பங்கொன்றின் மீதான வருமானமாக தனது பங்காளர்களுக்கு 22 வீதத்தை வழங்கியுள்ளது. பங்கொன்றின் நிகர சொத்துப் பெறுமதி 12.48 ரூபாவாக அமைந்துள்ளது. இது 34மூ வருடாந்த அதிகரிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
கம்பனி 4.4 பில்லியன் ரூபாவை இழப்பீட்டு கோரிக்கையாக வழங்கியிருந்த போதிலும் இந்த பெறுபேறுகளை பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். இந்த உறுதியான நிதிப் பெறுபேறுகள் என்பது கம்பனியின் பண வழங்கல் திறனுக்கான தரப்படுத்தலை A எனும் நிலைக்கு முன்னணி நிதி தரப்படுத்தல் நிறுவனமான RAM ரேட்டிங்ஸ் இடமிருந்து பெற்றுள்ளது.
 
மேலும், கம்பனி 8.7 பில்லியனை தேறிய வழங்கிய தவணைக்கட்டணமாக பெற்றுள்ளதுடன், இதில் 75% வை ஆயுள் தவிர்ந்த தவணைக்கட்டணங்களின் மூலம் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது கம்பனியின் புதுப்பிக்கப்பட்ட பன்முகத்தன்மையான செயற்பாட்டுக்குரிய போக்கை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 
 
ஆயுள் பிரிவு என்பது 8.3 வீதமான வளர்ச்சியை பதிவு செய்து 2.19 பில்லியன் ரூபாவை எய்தியிருந்தது. ஆயுள் காப்புறுதி தவிர்ந்த வர்த்தக நடவடிக்கையில் 6.5 பில்லியன் ரூபாவை வருமானத்தில் பதிவு செய்திருந்தது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10% அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஜனசக்தி ஆயுள் காப்புறுதியின் கடன் தீர்க்கும் ஆற்றல் என்பது தேவையான எல்லைப் பெறுமதியான 440 வீதத்திலிருந்து 710 வீதமாக 2013 இல் அதிகரித்திருந்தது. 2012 ஆம் ஆண்டில் 15.84 பில்லியன் ரூபாவாக காணப்பட்ட கம்பனியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி 2013 ஆம் ஆண்டின் இறுதியில் 18.65 பில்லியன் ரூபாவாக அதிகரித்திருந்தது.
 
ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரகாஷ் ஷாஃப்ட்டர் கருத்து தெரிவிக்கையில், 'கடந்த 20 ஆண்டுகளில் ஜனசக்தி காப்புறுதி என்பது நாட்டின் மிகவும் புத்தாக்கம் வாய்ந்த நிறுவனமாக தன்னை உயர்த்தியுள்ளது. 1994 ஆம் ஆண்டு ஆயுள் காப்புறுதி சேவைகளை மட்டும் வழங்கும் நிறுவனமாக தனது செயற்பாடுகளை ஆரம்பித்த இந்நிறுவனம், தற்போது ஆயுள் தவிர்ந்த காப்புறுதி பிரிவில் மூன்றாவது மிகப்பெரிய காப்புறுதி நிறுவனமாகவும், ஆயுள் பிரிவில் ஆறாவது பெரிய நிறுவனமாகவும் திகழ்கிறது. 3000 ஊழியர்களையும் முகவர்களையும் நாம் கொண்டுள்ளோம். வருடாந்தம் 30 மில்லியன் ரூபாவை நாம் மனித வள அபிவிருத்திக்காக செலவிடுகிறோம். நாம் கடந்து வந்த பயணம் என்பது கடுமையானதாக அமைந்திருந்த போதிலும், எமது துறையில் முன்னணி நிறுவனமாக திகழ்வது எனும் இலக்கை நாம் எய்தியுள்ளோம் என நான் நம்புகிறேன்' என்றார். 
 
'காப்புறுதி துறையை பொறுத்தமட்டில் ஒன்றிணைவுகளும் கையகப்படுத்தல்களும் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ளதால், சவால் நிறைந்த ஒரு நிலையை எதிர்நோக்கியுள்ளது. எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளக்கூடிய நிலையில் ஜனசக்தி உள்ளது, புதிய முறைகளின் மூலம் வளர்ச்சியை நோக்கி பயணிக்கலாம்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.  
 
நிறுவனத்தின் கடுமையான உழைப்பை இனங்கண்டு அதனை அங்கீகரித்து சில உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகளை வழங்கியிருந்தது. மிக அண்மையில் இடம்பெற்ற 5th CMO ஆசிய விருதுகளிலும், வர்த்தக நாம சிறப்புகளுக்கான சர்வதேச விருதுகளிலும் ஜனசக்தி வெற்றியீட்டியிருந்தது. அத்துடன், குளோபல் வர்த்தக நாம நிலையாண்மை விருதுகளிலும் விருதை பெற்றிருந்தது. உள்நாட்டை பொறுத்தமட்டில், ஜனசக்தி, தேசிய வர்த்தக சிறப்புகளுக்கான விருது வழங்கலில் தங்க விருதையும் ஜனசக்தி வென்றிருந்தது.
 
புத்தாக்கம் என்பதை பொறுத்தமட்டில், ஜனசக்தி முன்னோடியாக திகழ்கிறது. சம்பத் வங்கியுடன் அண்மையில் கைகோர்த்திருந்ததன் மூலம், மொபைல் காஷ் கொடுப்பனவு தீர்வை அறிமுகம் செய்திருந்தது. டயலொக் eZ Cash உடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு தமது கையடக்க தொலைபேசிகளினூடாக காப்புறுதி திட்டங்களை கொள்வனவு செய்வதற்கான வசதியை வழங்கியிருந்தது. 2013இல், ஜனசக்தி புத்தாக்க வகையில் அமைந்த தனது மோட்டார் வாடிக்கையாளர்களுக்காக Full Option Locator Appஐ அறிமுகம் செய்திருந்தது.
 
ஜனசக்தி அண்மையில் புத்தாக்க வகையிலமைந்த ஆவணங்கள் முகாமைத்துவ கட்டமைப்பை அறிமுகம் செய்திருந்தது. இது நிறுவனத்தின் சகல காப்புறுதி பயன்பாடுகளுடன் தொடர்புடைய மென்பொருள் சார்ந்ததாக அமைந்திருந்தது.
 
புத்தாக்க வகையிலமைந்த புவியியல் தகவல் கட்டமைப்பை (GIS) ஜனசக்தி அறிமுகம் செய்திருந்தது. இது உள்நாட்டு புவியியல் தரவு மற்றும் அதன் காப்புறுதி இடரை மதிப்பீடு செய்யும் வகையில் அமைந்துள்ளது. இதற்காக பிரதான காப்புறுதி பயன்பாடுகளின் தரவுகளை GIS சேவைகளைக் கொண்டு Google maps ஊடாக வெளிப்படையாக கிடைக்கும் வகையில் செய்திருந்தது. இதற்காக ஆசிய காப்புறுதி தொழில்நுட்ப விருதுகள் வழங்கலின் போது விருதும் வழங்கப்பட்டிருந்தது.
 
மிகவும் மோசமான நிலையை எதிர்நோக்கியிருந்தவர்களுக்கு காப்புறுதிகளை வழங்க தொடர்ச்சியாக முன்வந்திருந்த நிறுவனமாக ஜனசக்தி திகழ்கிறது. குறிப்பாக HIV/AIDS நோயாளர்களுக்கு காப்புறுதிகளை வழங்கியிருந்தது. 2004 ஆம் ஆண்டில் இராணுவ வீரர்களுக்கான காப்புறுதிகளையும் வழங்கியிருந்தது.
 
அண்மைக் காலங்களில் கம்பனி 'நம்பிக்கையை வென்றெடுத்தல்' எனும் தொனிப்பொருளுக்கமைவாக தனது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. சமூகத்தைச் சேர்ந்த இளம் மெய்வல்லுநர்களுக்கு உதவிகளை வழங்கியிருந்தது. இலங்கை நீர் பங்காண்மையுடன் கைகோர்த்து, நீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இந்த செயற்திட்டம் மஹா ஓயா பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஜனசக்தி காப்புறுதி நிறுவனம், உலக பார்வை தினத்தை குறிக்கும் வகையில் கண் பாதுகாப்பு மையத்துடன் இணைந்து பார்வை குறைபாட்டைக் கொண்டவர்களுக்கு உதவிகளை வழங்கியிருந்தது.
 
இந்த ஆண்டு, ஜனசக்தி இன்சூரன்ஸ் தனது கிளை வலையமைப்பை விஸ்தரித்து நாடு முழுவதும் 112 கிளைகளை கொண்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X