2021 மே 11, செவ்வாய்க்கிழமை

சர்வதேச கைத்தொழில் கண்காட்சியில் கலந்துகொள்ள பிரான்ஸ் இணக்கம்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 17 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

இலங்கையில் அடுத்த வருடம் மார்ச் மாதம்  நடைபெறவுள்ள சர்வதேச கைத்தொழில் கண்காட்சிக்கு  தமது விசேட வர்த்தக மற்றும் கைத்தொழில்த்துறை சார்ந்த குழுவொன்றை அனுப்புவதற்கு பிரான்ஸ் இணக்கம் தெரிவித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை அமைச்சர் ரிசாட் பதியுதீன் மேற்கொண்டிருந்தார். இதன்போது அந்நாட்டின் வர்த்தக சம்மேளனத் தலைவர் பெயரி என்டொய்ன் கெய்லி தலைமையில் நடைபெற்ற சந்திப்பின்போது  தாம் விடுத்த இந்த அழைப்பை பிரான்ஸ் வர்த்தக சமூகம் ஏற்றுக்கொண்டதாகவும்  அவர் கூறினார்.

அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையில் சென்றுள்ள இலங்கை வர்த்தக சங்கப் பிரதிநிதிகள்,  பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து நாடுகளுக்கும் பயணிக்கவுள்ளதாக அமைச்சின் கீழியங்கும் ஏற்றுமதி அபிவிருத்திச்சபை தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X