2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

இலங்கை நாணயக்கொள்கைகளில் தொடர்ந்தும் தளர்வு ஏற்படுத்தப்படும்: மத்திய வங்கி ஆளுநர்

A.P.Mathan   / 2013 மார்ச் 05 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் நாணயக் கொள்கைகளில் தொடர்ந்தும் தளர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை பெருமளவில் கவரும் வகையில் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

எமது நாட்டின் அபிவிருத்திக்கு தேவையான வளங்கள் எமது நாட்டில் காணப்படாத பட்சத்தில் அவற்றை வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய தேவை எமக்கு எழுந்துள்ளது.

படிப்படியாக நாம் நாணய மாற்றுக் கொள்கையை தளர்த்தி, அதனை உறுதியான ஒரு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை நாம் மேற்கொண்டு வருகிறோம். தற்போது நாம் மிகவும் வேகமாக அவசரமாக எந்த தீர்மானத்தையும் மேற்கொள்வதில்லை, ஆயினும் எதிர்வரும் காலங்களில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானித்துள்ளோம். என மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்திருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .