2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

மாத்தறை – பெலியத்த வீதியை புனரமைக்கும் வகையில் சீனாவின் எக்சிம் வங்கி உடன்படிக்கை கைச்சாத்து

A.P.Mathan   / 2013 மார்ச் 05 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை – பெலியத்த வீதியை புனரமைக்கும் நடடிவக்கைகளுக்கு அவசியமான கடன் தொகையான 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கான உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கத்துடன், சீனாவின் எக்சிம் வங்கி கைச்சாத்திட்டுள்ளது.

இந்த கடன் தொகைக்கான வட்டி 2 வீதம் ஆக அமைந்துள்ளதுடன், 20 வருட காலப்பகுதியினுள் மீள செலுத்தும் வகையில் அமைந்துள்ளது. மாத்தறை முதல் கதிர்காமம் வயைிலான புகையிரத பாதை விஸ்தரிப்பு நடவடிக்கைகளுக்கு சமாந்தரமானதாகவே இந்த வீதி புனரமைப்பு பணிகளும் இடம்பெறவுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தளை விமானநிலையத்தின் அங்குரார்ப்பணத்தை தொடர்ந்து, தென்பிராந்தியத்துடனான போக்குவரத்து நடவடிக்கைகள் பெருமளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதை தொடர்ந்து, இந்த வீதி புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு அவசியமான நிதி உதவியை சீனாவிடமிருந்து இலங்கை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .