2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி.இன் நான்கு புதிய கிளைகள்

A.P.Mathan   / 2013 மே 29 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. (PLF) தனது விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வெலிமடை, வெள்ளவாய, மொனராகல, களுவாஞ்சிகுடி ஆகிய இடங்களில் நான்கு (4) புதிய கிளைகளைச் சமீபத்தில் திறந்துவைத்தது. இந்த நான்கு கிளைகளுடன் PLF வலையமைப்பிலுள்ள கிளைகளின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களில் கவனம் செலுத்தும் அரசாங்கத்தின் பிரதேச அபிவிருத்தித் திட்டத்திற்கு அமைவாகவே PLF தனது விரிவாக்கத் திட்டத்தை மேற்கொள்கிறது. புதிய கிளைகளை PLF பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டி.பி.குமாரகே, உதவிப் பொது முகாமையாளர் லக்சந்த குணவர்தன ஆகியோர் திறந்துவைத்தனர். சம்பந்தப்பட்ட கிளைகளின் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஆதரவாளர்களும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.  
 
இலங்கையின் வங்கித்துறை சாராத நிதிச் சேவைகள் சந்தையில் முன்னணி வகிக்கும் PLF, தனது கிளை வலையமைப்பின் மூலம் பிரதேச ரீதியான வாடிக்கையாளர்களுக்கு லீசிங், வாடகைக் கொள்வனவு, நிலையான வைப்புக்கள், சேமிப்புக் கணக்குகள், கடன்கள், பண மாற்றங்கள், நுண்ணளவு நிதியுதவி, வாகன அணி முகாமை, உத்தரவாதங்கள், பெறுமதி மதிப்பீடு, காணி ஆதன அபிவிருத்தி, காப்புறுதி, இஸ்லாமிய நிதிச் சேவைகள் போன்ற வசதிகளை மிகவும் கவர்ச்சியான நிபந்தனைகளுடனும் விரைவாகவும் வழங்குகின்றது. 
 
புதிய கிளைகளின் ஆரம்பம் பற்றி திரு. குமாரகே கருத்து வெளியிடுகையில், கிராமப்புற தொழில் முயற்சியாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டி, அவர்களைத் தேசிய தொழிற்றுறை அமைப்பில் இணைப்பதும் சேமிப்புக்கள் மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் பொதுமக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதுமே பிரதேச ரீதியாகப் புதிய கிளைகள் திறக்கப்படுவதன் நோக்கம் என்று கூறினார்.
 
'வாடிக்கையாளர்களுக்கு நாம் வழங்கும் செயற்றிறன் மிக்க சேவைக்கு நவீன தொழில்நுட்பத்தின் பிரயோகமும் தேர்ச்சி பெற்ற ஊழியர்களின் பணியும் அச்சாணியாக விளங்குகின்றன.'
 
'கடந்த சில வருடங்களில் காப்புறுதி, நுண்ணளவு நிதியுதவி, காணி அபிவிருத்தி மற்றும் வாகன அணி முகாமைக்காக பல உப நிறுவனங்களை நாம் ஏற்படுத்தியுள்ளதால், கிராமப்புற மக்கள் அனைத்து நிதிச் சேவைகளை பெறக்கூடிய ஓர் இடமாக PLF மாறியுள்ளது. விரிவான சேவைகளின் தொகுதியை இலகுவாகவும் குறைந்த செலவிலும் எமது குழமத்தினால் வழங்க முடிகிறது' என்று குமாரகே தெரிவித்தார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .