2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் பில்லியன் டொலர்கள் பெறுமதியான முதலீடுகள்

A.P.Mathan   / 2013 ஜூன் 05 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக இரண்டாவது தடவை மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய சுமார் பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீடுகள் மேற்கொள்வதற்கு பல வெவ்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக அரச துறைமுக அதிகார சபையின் தலைவர் பிரியத் விக்ரம தெரிவித்துள்ளார்.
 
பதினொரு உற்பத்தி துறையை சேர்ந்த நிறுவனங்கள் ஏற்றுமதி நோக்கம் கருதி தமது உற்பத்தி ஆலைகளை இந்த பகுதிகளில் அமைப்பதற்கான முதலீடுகளை மேற்கொள்ள வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
 
முதலாவது கோரிக்கையின் பிரகாரம் 800 மில்லியன் ரூபா பெறுமதியான முதலீடுகள், சீமெந்து உற்பத்தி, சீனி உற்பத்தி, பிளாஸ்ரிக் மற்றும் களஞ்சியப்படுத்தல் போன்ற பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .