2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

பொருளாதார செயலமர்வு மாநாட்டில் இலங்கையின் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து ஆராய திட்டம்

A.P.Mathan   / 2013 ஜூன் 06 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் 14ஆவது பொருளாதார செயலமர்வு மாநாட்டில் இலங்கையின் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து கலந்தாலோசிக்கப்படவுள்ளது. இந்த செயலமர்வு மாநாடு எதிர்வரும் ஜூலை மாதம் 9ஆம் திகதி முதல் 11ஆம் திகதிவரை கொழும்பில் இடம்பெறவுள்ளது.
 
இலங்கையின் ஏற்றுமதி குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கப்பட வேண்டும் என அரசின் கொள்கைகளில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், உலக நாடுகளின் ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில் இந்த பெறுமதியில் வீழ்ச்சியான நிலையே காணப்படுகிறது.
 
இந்த மாநாட்டின் பிரதான வளவாளராக அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகளுக்கான பேராசிரியரும் மன்செஸ்ட்டர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளருமான பிரேமசந்திர அத்துகொரள கலந்துகொள்ளவுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .