2026 ஏப்ரல் 24, வெள்ளிக்கிழமை

இன்டர்ஓசியன் லுப்ரிகன்ட்ஸ் மூலம் உயிரிழந்த மீனவ குடும்பங்களுக்கு உதவி

A.P.Mathan   / 2013 ஜூன் 22 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


நாட்டின் தென் பகுதியில் நிலவிய மோசமான காலநிலையின் காரணமாக தமது உயிர்களை பறிகொடுத்திருந்த மீனவர்களின் குடும்பத்தாருக்கு நிதியுதவிகளை, உலகின் முன்னணி சினோபெக் மசகு எண்ணெய் வகைகளை உள்நாட்டில் விநியோகிக்கும் நிறுவனமான இன்டர்ஓசியன் லுப்ரிகன்ட்ஸ் பிரைவேற் லிமிடெட் அண்மையில் வழங்கியிருந்தது. இன்டர்ஓசியன் லுப்ரிகன்ட்ஸ் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டமாக அமைந்துள்ள இந்த நடவடிக்கை கடந்தவாரம் இடம்பெற்றிருந்தது. 
 
இந்த நடவடிக்கைக்கு பேருவளை மற்றும் பாணந்துறை மீன்பிடி துறைமுக கம்பனி நிர்வாகம் இணைந்து 14 குடும்பத்தினருக்கு தமது வாழ்க்கைத்தரத்தை மீண்டும் கட்டியெழுப்பி முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான உதவித் தொகையை வழங்கியிருந்தது. 
 
இந்த திட்டம் குறித்து இன்டர்ஓசியன் லுப்ரிகன்ட்ஸ் நிறுவனத்தின் பொது முகாமையாளர் ஷிரான் அபேசிங்க கருத்து தெரிவிக்கையில், 'பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனம் எனும் வகையில், நாம் வெவ்வேறான சமூக பொறுப்புணர்வு வாய்ந்த திட்டங்களை மக்களின் வாழ்க்கைத்தரங்களை முன்னேற்றும் வகையில் முன்னெடுத்திருந்தோம். இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு வழிகளில் நாம் உதவிகளை வழங்குவது குறித்து நாம் ஆராய்ந்து வருகிறோம்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .