
வாடிக்கையாளர்களின் சௌகரியம் மற்றும் சிறந்த சேவையினை வழங்கும் நோக்கில் ஜனசக்தி நிறுவனமானது தனது புதிய கிளையை அத்துறுகிரிய பிரதேசத்தில் திறந்து வைத்தது. இல 70/20, முதல் மாடி, பிரதான வீதி, அத்துறுகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள இப் புதிய கிளை மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஒருங்கிணைந்த தீர்வுகள் வழங்கப்படுகிறது. இப் புதிய கிளையை ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் உப தலைவர் சந்திரா ஷாஃப்ட்டர் திறந்து வைத்தார். இத் திறப்பு விழாவில் ஜனசக்தி நிறுவன மூத்த முகாமைத்துவத்தின் அங்கத்தவர்களும், அத்துறுகிரிய பிரதேசத்தின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இத் திறப்பு விழாவில் கருத்து தெரிவித்த விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் செஹாரா டி சில்வா, 'எமது நிறுவனமானது வாடிக்கையாளர் சார்ந்த அமைப்பாகும். வாடிக்கையாளர்களிற்கு தொடர்ச்சியாக புதுமைகளை வழங்கவுள்ளோம். இப் புதிய அத்துறுகிரிய கிளையானது நீடித்த தன்மையையும், நவீன அலுவலகத் செயற்பாட்டு தோற்றத்தையும் கொண்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, வாடிக்கையாளர்களிற்கு வீட்டிலிருக்கும் உணர்வினை ஏற்படுத்தும் வகையில் வர்த்தகநாமத்தின் அடையாளங்களான எளிமை, நேர்மை மற்றும் அரவணைப்பு போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் அலுவலக தோற்றம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது' என்றார்.
ஜனசக்தி நிறுவனமானது இப் புதிய கிளையுடன் சேர்த்து நாடுபூராகவும் 110 கிளை வலையமைப்பினை தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர் தகவல்களை அணுகுவதற்கான நெகிழ்வுத்தன்மை மற்றும் தமது கொள்கைகளுக்கான பரிமாற்றங்களை எவ்வித தங்குதடையின்றி மேற்கொள்ளும் வகையில் ஏனைய ஜனசக்தி கிளை நிறுவனங்களைப் போல இப் புதிய கிளையும் தலைமை காரியாலயத்துடன் கணிணி மூலமான தொடர்பினை கொண்டுள்ளது.
'சௌகரியம் மற்றும் சிறந்த சேவைகளை வாடிக்கையாளர்களிற்கு வழங்கும் நோக்கில் நாம், எமது வர்த்தகநாமத்தின் வாக்குறுதிகளாகிய பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை, ஒழுக்க நடைமுறைகள் மற்றும் வாடிக்கையாளர் பிரதிபலிப்பு போன்றவற்றை அடையாளப்படுத்தும் வகையில் எமது வியாபார நிலையங்களை உருவாக்கியுள்ளோம். இவற்றை கருதியே, அத்துறுகிரிய கிளையானது ஜனசக்தி நிறுவனத்தின் உண்மையான அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் புதுமை மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கைக்குரிய தயாரிப்புகளான லைஃப் சேவர், ஒரு வருடத்திற்கு பின்னரும் மாறாத கொள்கையான தனிநபர் ஓய்வூதிய திட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது' என ஜனசக்தி நிறுவனத்தின் உப தலைவர் சந்திரா ஷாஃப்ட்டர் தெரிவித்தார்.
'ஜனசக்தி எமது சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் சேவைகளை வழங்குகிறது. இதன் காரணமாகவே எமது வலையமைப்பு நாடுபூராகவும் விஸ்தரித்துள்ளது. நாம் தொடர்ச்சியான முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தி வருவதுடன், சேவைகள் மற்றும் வசதிகள் அடிப்படையில் எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்தவற்றையே வழங்கவுள்ளோம்' என மேலும் அவர் தெரிவித்தார்.