2026 ஏப்ரல் 24, வெள்ளிக்கிழமை

ஃபெஷன் பக் நிறுவனம் சுற்றாடல் தினத்தை குருநாகல் நகரில் கொண்டாடுகிறது

A.P.Mathan   / 2013 ஜூன் 27 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


2013ஆம் ஆண்டிற்கான சுற்றாடல் தினத்தை கொண்டாடும் முகமாக, ஃபெஷன் பக் நிறுவனம் குருநாகல் மாநகர சபையுடன் இணைந்து 'துரு சஹசக்' சுற்றாடல் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தது. 'திவி நெகும' செயற்றிட்டத்திற்கு இணைவாக மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வில், குருநாகலில் வசிக்கும் 50 குடும்பங்களுக்கு மரக் கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக நடைமுறைப் படுத்தப்படுகின்ற இந் நீண்ட கால செயற்றிட்டத்தின் பிரதான நோக்கம் தன்னிறைவுள்ள தேசத்தை கட்டியெழுப்புதலாகும்.
 
ஃபெஷன் பக் நிறுவனம், குருநாகல் மாநகர சபையுடன் இணைந்து தேசத்தில் முதன்முறையாக இவ்வாறான செயல்திட்டத்தை ஏனைய நிறுவனங்களுக்கு முன்னோடியாக செயற்படுத்தி இருக்கின்றமை விஷேட அம்சமாகும். குருநாகல் மாநகர சபையின் முதல்வர் காமினி பெரமுனகே இந்நிகழ்வை அலங்கரித்ததுடன், ஏனைய மாநகர சபைகளுக்கு முன்மாதிரியாக சிறந்ததொரு, முன்னோடியான வேலைத்திட்டதை முன்னெடுப்பதற்காக முழு முனைப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
 
அத்துடன், குருநாகல் குளத்தை அன்றிய பகுதிகளை அலங்கரிக்கும் செயற்றிட்டத்திற்கு ஃபெஷன் பக் நிறுவனம் வலுவான 20 பனைக் கன்றுகளை நட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
 
ஃபெஷன் பக் இலங்கையில் மிகப்பெரிய சில்லறை ஆடை அணிகலன்கள் விற்பனை நிலைய வலைபின்னல் என்ற வகையில், பொறுப்பு வாய்ந்த பாரிய நிறுவனம் என்ற வகையில், கரியமில தடம் (Carbon Footprint), அதன் ஆற்றல் மற்றும் நுகர்வு என்பவற்றை குறைப்பதில் திடமாக செயற்படுகின்றது. 2011ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தனது சகல கிளைகளிலும் மின்வலுச் சேமிப்பு மற்றும் பச்சைவீட்டுச் செயல்முறைகளை நடைமுறைப் படுத்தியதுடன், 2012ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டின் நிறைவடையும் போது, வலு விரயத்தை 30% ஆக குறைப்பதற்கு இது பெருமளவில் துணை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .