
செலான் வங்கி பி.எல்.சி. ஆனது, 'செலான் அட்டைகள் பிரமாண்டமான வெகுமதிகள்' (Seylan Cards Mammoth Offers) எனும் தனது விற்பனை ஊக்குவிப்புத் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதன் மூலம், கடனட்டைகளுக்கு வழங்கப்படுகின்ற அனுகூலங்களை முற்றிலும் புதியதும் மனமகிழ்ச்சி தரக்கூடியதுமான ஒரு மட்டத்திற்கு கொண்டு செல்கின்றது.
ஜூலை 28ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை முதற்கொண்டு, செலான் வங்கியின் கடனட்டை வாடிக்கையாளர்கள் அனைவரும் ஒரு தொடரிலான பிரமாண்டமான அனுகூலங்கள் வழங்கி உபசரிக்கப்படவுள்ளனர். அதாவது சுப்பர் மார்க்கட் பொருட்கொள்வனவு முதல் - எரிபொருள் நிரப்புதல், ஆடைக் கொள்வனவு, உணவருந்துதல், ஹோட்டலில் தங்குதல், வெளிநாட்டுப் பயணம், சுகாதார சேவை வரையான இலங்கையின் அனைத்துப் பாகங்களையும் உள்ளடக்கியதான பல்வகைப்பட்ட வெகுமதிகள் வழங்கப்படவுள்ளன.
2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆம் திகதி வரைக்கும் நடைமுறைப்படுத்தப்படும் இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் செலான் வங்கியின் கடனட்டை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் நாடெங்கிலும் உள்ள உயர்தரமான ஹோட்டல்கள் மற்றும் தங்குவிடுதிகளில் தங்கியிருக்கும் வேளையில் 60 சதவீதம் வரையான கழிவினைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறான ஹோட்டல்களுள் ஏடன் ஹோட்டல், அவானி - களுத்துறை, ஹோட்டல் சீகிரியா, கிளப் ஹோட்டல் டொல்பின் - நீர்கொழும்பு, செரண்டிப் ஹோட்டல், சிற்ட்ரஸ், ஓரியன்ட் ஹோட்டல் - பண்டாரவளை, டப்ரோ ஸ்பா – பேருவளை மற்றும் திஸ்ஸமஹாராம, அமாரா ஸ்கை, உடவளவ ரிசோர்ட்ஸ், டிக்வெல்ல ஹோட்டல், ரன்ன 212, லயா சபாரி, லயா பீச் மற்றும் லயா லெஷர் போன்றவையும் உள்ளடங்கும்.
ஆர்வமுள்ள செலான் வங்கியின் கடனட்டைப் பாவனையாளர்கள் பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள இயலுமாகவுள்ள அதேநேரம் கிளசிக் ட்ரவல்ஸ், ஜெட்விங்க் ஹொலிடேஸ், எய்க்கின் ஸ்பென்ஸ் ட்ரவல்ஸ் மற்றும் ஃபிளை இன் ஸ்டைல் ஆகிய பயண சேவைகளில் மாதமொன்றுக்கு வெறுமனே ரூபா 3,500 செலவிடுவதன் வாயிலாக எந்தவொரு நாட்டிற்கும் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
செலான் வங்கியின் கடனட்டை வாடிக்கையாளர்கள் கார்கில்ஸ், கீல்ஸ், ஆர்பிகோ, லாஃப்ஸ் மற்றும் ஏனைய சுப்பர் மார்க்கட் விற்பனை நிலையங்களில் வார இறுதி நாட்களில் மு.ப. 8.00 மணிமுதல் பி.ப. 8.00 மணி வரை பொருட் கொள்வனவை மேற்கொள்கின்ற சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு அலாதியான புது அனுபவம் கிடைக்கின்றது. இவ் விற்பனை நிலையங்களில் நீங்கள் ரூபா 3,500 இற்கு அதிகமான தொகையை கடனட்டையைப் பயன்படுத்தி செலவு செய்யும் போது 10மூ தள்ளுபடியை (அதிகபட்ச கழிவு ரூபா 1,000) கொண்டு வருகின்றது. அதேபோல், வரவு அட்டைகளின் மூலம் கொள்வனவை மேற்கொண்டால் 5 சதவீத (உயர்ந்தபட்ச கழிவு ரூபா 300) தள்ளுபடி கிடைக்கின்றது.
இதேவேளை, புதன்கிழமைகளில் எரிபொருள் நிரப்பும்போதும் அனுகூலங்கள் விஸ்தரிக்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி நாடெங்கிலும் உள்ள எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் கடனட்டை மூலம் ரூபா 1,000 செலவு செய்து எரிபொருள் நிரப்பும்போது ஒவ்வொரு லீற்றருக்கும் ரூபா 10 (உயர்ந்தபட்ச கழிவு ரூபா 1,000) தள்ளுபடியும், வரவு அட்டையைப் பயன்படுத்தி நிரப்பினால் ரூபா 5 (உயர்ந்தபட்சம் ரூபா 300) தள்ளுபடியும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றது.
செலான் வங்கியின் அட்டைகள் பிரிவு பிரதம முகாமையாளரான நிமேஷ் பெர்ணான்டோ கூறுகையில், 'இந்த மாபெரும் வெகுமதி வழங்கலானது அடிப்படையில் எமது ஒட்டுமொத்த கடனட்டை வாடிக்கையாளர் தளத்தையும் மையமாகக் கொண்டதாகும். அவர்களுக்கும், அதேபோல் புதிதாக கடனட்டைக்காக விண்ணப்பிக்கும் நபர்களுக்கும் வெகுமதிகளை வழங்குவதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். இதன்பொருட்டு, எந்தவொரு நபரும் செய்ய வேண்டியதெல்லாம் நாடு முழுவதும் காணப்படுகின்ற எமது செலான் வங்கியின் ஏதாவது ஒரு கிளைக்குச் சென்று, முறையாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் அவசியமான ஆவணங்களையும் சமர்ப்பிக்கும் பட்சத்தில் 24 மணித்தியாலங்களுக்குள் செலான் கடனட்டையைப் பெறலாம். அதேநேரம், எமது அழைப்பு நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு இது தொடர்பான மேலதிக விபரங்களையும் அறிந்து கொள்ள முடியும்' என்றார்.
வெள்ளிக்கிழமைகளில் உங்களுக்கு விருப்பமான எந்தவொரு இடத்திற்கும் சென்று உணவு சாப்பிடுவதன் மூலம் வார இறுதியை நீங்கள் ஆரம்பியுங்கள். இதன்போது 20 சதவீத தள்ளுபடி உங்களுக்கு வழங்கப்படும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ரூபா 5,000 இனை செலவளிக்க வேண்டியது மட்டுமே (உயர்ந்தபட்சமாக ரூபா 2,000 கழிவாக கிடைக்கும்) சுப்பர் மார்க்கட் கொள்வனவு, எரிபொருள் நிரப்புதல் மற்றும் உணவருந்துதல் போன்ற கொடுக்கல் வாங்கல்களுக்கான தள்ளுபடித் தொகையானது கடனட்டை பாவனையாளரின் செப்டெம்பர் மாத வங்கிக்கூற்று பட்டியலில் வரவு வைக்கப்படும்.
ஆடை மற்றும் அணிகலன்கள் கொள்வனவு தொடர்பாக இலங்கையர் கொண்டுள்ள தீராத வேட்கையானது செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வெகுமதிகளை பெற்றுக் கொள்கின்றன. மேற்படி தினங்களில் ஹமீடியா, கூல் பிளானட், கியோர்டானோ, டில்லிஸ் அன்ட் கர்லோ, மதர் கெயார், சஃப்பன்ஸ், மல்லிகா ஹேமச்சந்திர. லக்ஷ்மிஸ், பெவேர்லி ஸ்ரீற், கிட்ஸ் அன்லிமிட்டட், ஸ்டோன் என் ஸ்ட்ரிங் போன்ற பல முன்னணி விற்பனை மையங்களில் ஆடைகளை கொள்வனவு செய்யும் வேளையில் 20 சதவீத கழிவு கிடைக்கப் பெறும்.
அதுமட்டுமன்றி லங்கா ஹொஸ்பிட்டல்ஸ், ஆசிரி ஹொஸ்பிட்டல்ஸ், டேர்டன்ஸ் ஹொஸ்பிட்டல் மற்றும் செலிங்கோ ஹெல்த் கெயார் ஆகிய வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் அவசர மருத்துவ சிகிச்சைகளுக்கு 45 சதவீதம் வரையிலான கழிவினையும் செலான் வங்கியின் கடனட்டை வழங்குகின்றது.
இந்த அற்புதமான வெகுமதிகளுக்கு மேலதிகமாக, நாடு முழுவதிலுமுள்ள 90 இற்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களில் 60 மாதங்கள் தவணையைக் கொண்ட 0 சதவீத வட்டியுடனான (வட்டியற்ற) விஷேட கொள்வனவு திட்டத்தையும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கக் கூடியதாகவுள்ளது.
செலான் வங்கியின் தனிநபர் வங்கியியல் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் திஸ்ஸ நாணயக்கார கூறுகையில், 'செலான் வங்கியானது 25 ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்ற இவ்வருடத்தில் பல்லாயிரக் கணக்கான எமது கடனட்டை வாடிக்கையாளர்களுடன் இப் பிரமாண்டமான வணிக வெகுமதியை பகிர்ந்து கொள்வதையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். 'அன்புடன் அரவணைக்கும் வங்கி' என்ற வகையில், எமது வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களுடன் நாம் தொடர்ச்சியாக ஒத்திசைந்தே செயற்பட்டு வருகின்றோம். வெறுமனே கணக்கு இலக்கங்களை வைத்து அடையாளம் காணப்படுகின்ற சாதாரண வாடிக்கையாளர்களாக அவர்கள் இல்லை. மாறாக, செலான் வங்கியின் மிகவும் நெருக்கமான குடும்ப உறுப்பினர்களாகவே அவர்கள் கருதப்படுதுடன், அவர்கள் தொடர்பில் நாம் பெருமை கொள்கின்றோம். அவர்கள் எமக்கு மிக முக்கியமானவர்கள். இதுவொரு தனிச்சிறப்புமிக்க ஊக்குவிப்புத் திட்டமாக காணப்படுவதால் அவர்கள் இது குறித்து அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென விரும்புகின்றோம்' என்றார்.