2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தமது விற்பனை குழுவின் சிறப்பான செயற்பாடுகளை கௌரவித்தது ஜனசக்தி

Kogilavani   / 2013 செப்டெம்பர் 02 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


தனது விற்பனை குழுவில் சிறப்பாக செயலாற்றியிருந்த ஊழியர்களை கௌரவிக்கும் வகையில் ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவனம் அண்மையில் கிங்ஸ்பரி ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் வெற்றியீட்டியவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலாக்கள், வார இறுதி பக்கேஜ்கள், பணப்பரிசுகள், கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் போன்றன வழங்கப்பட்டன.

'மனதிற்கு சக்தி' எனும் தொனிப்பொருளில்; ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜனசக்தி அரையாண்டு விருது விழா 2013 ஆனது நிறுவனத்தின் புதியதொரு நிறுவன அடையாளத்தை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது.

'ஒவ்வொரு ஆண்டும் எமது விற்பனை குழுவின் கடின உழைப்பு மற்றும் சாதனைகளை நாம் கௌரவித்துவருகிறோம். எமது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்களை விஸ்தரித்து தன்னம்பிக்கையை  ஊக்கப்படுத்தும் வகையில் புதிய சகாப்தத்தை தொடங்கியுள்ள எமது பயணத்தில் இவ் ஆண்டிற்கான அரையாண்டு விருது விழாவானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக அமைந்திருந்தது.

எமது நிறுவனத்தின் முதுகெலும்பு விற்பனை குழுவினராகும். தொடர்ச்சியாக அவர்களின் நம்பிக்கையை ஊக்குவித்து தனிப்பட்ட திறனுக்கு அப்பால் செல்வதற்கான ஊக்குவிக்கும் முயற்சிகளை தொடர்ந்து நாம் முன்னெடுத்து வருகிறோம்' என ஜனசக்தி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரகாஷ் ஷாஃப்ட்டர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பிரதான விருந்தினராக கலந்து சிறப்பித்த லாஃப் குழுமத்தின் ஸ்தாபகரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமான டபிள்யு.கே.எச்.வேகபிட்டிய அவர்கள் விற்பனை குழுவினர் மத்தியில் தனது வெற்றிகரமான சுய வாழ்க்கை பற்றி ஊக்கப்படுத்தும் வகையில் உரையாற்றியிருந்தார்.

இந் நிகழ்வில் சிறந்த பிராந்திய விற்பனை முகாமையாளருக்கான(பொது) விருது பி.சி.விஷ்வகவிற்கும், பொது விற்பனை பிரிவில் சிறந்த விற்பனை முகாமையாளருக்கான வைர விருது கே.டபிள்யு.எஸ்.டி.ரொஷானிற்கும் வழங்கப்பட்டது. ஜனசக்தி நிறுவனத்தின் பொது காப்புறுதியின் Hall of Fame விருது கொழும்பு மெட்ரோவைச் சேர்ந்த கே.எச்.டி.ஆரியவங்சவிற்கு வழங்கப்பட்டது.

கொழும்பு மத்திய நிலையத்தைச் சேர்ந்த டி.ஜே.பியதாஸவிற்கு நட்சத்திர பிரிவில் விருது வழங்கப்பட்டது. சிறந்த வர்த்தக ஊக்குவிப்பு முகாமையாளர் மற்றும் வணிக ஊக்குவிப்பு பிரிவில் வெள்ளி விருது அளுத்கம கிளையின் டி.வன்டபோனாவிற்கும், கொழும்பு வடக்கைச் சேர்ந்த எல்.சில்வாவிற்கு வைர விருதும் வழங்கப்பட்டது.

சிறந்த வர்த்தக ஊக்குவிப்பு பிரதிநிதி மற்றும் சிரேஷ்ட வணிக ஊக்குவிப்பு பிரதிநிதி பொது விற்பனை பிரிவில் காலி கிளையைச் சேர்ந்த பி.திகும்பரவிற்கு வெள்ளி விருதும், பதுளை கிளையைச் சேர்ந்த கே.ஜி.ஏ.பி.கிரேரோவிற்கு தங்க விருதும், கண்டி கிளையைச் சேர்ந்த எம்.வை.கே.விஜயசேகரவிற்கு வைர விருதும் வழங்கப்பட்டன.

சிறந்த வர்த்தக ஊக்குவிப்பு அதிகாரி பிரிவில் வைர விருது கொழும்பு மெட்ரோவைச் சேர்ந்த டபிள்யு.ஆர்.பி.கே.ரணவக்கவிற்கும், ஹோமாகம ADO

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .