.jpg)
ஜூலை மாத்தில் இலங்கையின் ஏற்றுமதி 8 வீத அதிகரிப்பை பதிவு செய்து 794.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. இறக்குமதி 20.8 வீத அதிகரிப்பை பதிவு செய்து 1601.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்ததாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, நடப்பு ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் நாட்டின் மொத்த இறக்குமதி செலவீனம் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2.6 வீத சரிவை பதிவு செய்திருந்ததுடன், ஏற்றுமதி வருமானம் 2.7 வீத சரிவை பதிவு செய்திருந்தது.
விவசாய ஏற்றுமதிகள் 21 வீத அதிகரிப்பை பதிவு செய்து, 233.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. தேயிலை ஏற்றுமதி 20 வீத அதிகரிப்பை பதிவு செய்து 135.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.
நுகர்வோர் பொருட்களின் இறக்குமதி 30 வீத அதிகரிப்பை பதிவு செய்து, 308 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்ததாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வியாபார இடைவெளி 40 வீத அதிகரிப்பை காண்பித்து, 743 மில்லியன் டொலர்களாக பதிவாகியிருந்தது.