2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

புதிய தோற்றத்துடன் லபார்ஜ் சீமெந்து பைகள்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 01 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமது வர்த்தக நடவடிக்கைகளை புதுப்பிக்கும் நோக்கிலும் சர்வதேச சந்தையில் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களுக்கு புதியதொரு தரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலும் லபார்ஜ் மஹாவலி சீமெந்து நிறுவனம் புதிய பொதியிடல் பையை அறிமுகப்படுத்தியுள்ளது.  
 
உறுகொடவத்தையில் அமைந்துள்ள லபார்ஜ் தலைமையகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற வைபவத்தில் புதிய சீமெந்து பொதியை லபார்ஜ் மஹாவலி சீமெந்து நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அனுராக் காக், நிறுவனத்தின் மிகப்பெரிய விநியோத்தர்களில் ஒருவரான தீப்த குமாரவிடம் கையளித்தார்.
 
தமது நிறுவனத்தின் சர்வதேச குறிக்கோளுக்கு அமைய செயற்படுத்தப்பட்ட இந்த திட்டம் ஊடாக வர்த்தக நடவடிக்கைகளுக்கு புதிய வடிவத்தை கொடுக்க நிறுவனம் எதிர்பார்க்கின்றது. 
 
சர்வதேச சீமெந்து சந்தையின் முன்னோடியான லபார்ஜ் நிறுவனம் நவீனமயப்படுத்தல் திட்டத்தின் புதிய எண்ணக்கருவான 'சிறந்த நகரங்களை கட்டுவோம்' என்பதற்கமையே இதனை முன்னெடுத்துள்ளது. எதிர்கால இலக்கு நோக்கி அமைக்கப்படும் வீதிகள், விமான நிலையங்கள், பாலங்கள், சுரங்கங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை அமைப்பதற்கும் இவை முக்கிய பங்காற்றுகின்றன. இப்புதிய பொதியிடலானது இலங்கை (SLS) தர நிர்ணயத்துக்கு அமைய பொதியிடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .