2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கொழும்பில் கழிவு முகாமைத்துவம் மற்றும் நீர் தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளுக்கு கடன் உதவி

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 02 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் கழிவு முகாமைத்துவம் மற்றும் நீர் தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளுக்கு 88 மில்லியன் டொலர்கள் கடனுதவியை இலங்கைக்கு வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. 
 
கொழும்பில் குழாய் மூலமாக நீர் விநியோகம் 95 வீதம் இடம்பெற்ற போதிலும், இந்த கட்டமைப்பு 100 ஆண்டுகள் பழமையானது. இன்றைய காலகட்டத்தில் நிலவும் தேவைகளை நிவர்த்தி செய்ய போதியளவு திறன் வாய்ந்ததாக இது அமைந்திருக்கவில்லை. இந்த கட்டமைப்பில் அபிவிருத்தியை மேற்கொள்வதன் மூலம் கொழும்பின் அனைத்து பகுதிகளுக்கும் 24 மணி நேரமும் நீர் விநியோகத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்பார்க்கிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .