2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தொழில்நுட்ப கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கு புதிய பயிற்சியளிக்கும் களனி கேபிள்ஸ்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 11 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முதல் தர இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பாடல்கள் வயர்களை தயாரித்து விநியோகிக்கும் நிறுவனமான களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டமாக, தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலத்திரனியல் சுற்றுக்கள் தொடர்பில் பயிற்சிப் பட்டறைகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது.
 
தொழில்நுட்ப கல்லூரிகளைச் சேர்ந்த இலத்திரனியல் சுற்றுக்களை வடிவமைக்கும் கற்கைகளை பயிலும் மாணவர்கள் நிறுவனம் இனங்கண்டு, அவர்களுக்கு இலத்திரனியல் சுற்றுக்களை நிறுவுவது தொடர்பான பயிற்சிகளை வழங்க தீர்மானித்துள்ளது.
 
இளைஞர் விவகாரம் மற்றும் ஆளுமை விருத்தி அமைச்சின் தொழில்நுட்ப கற்கை மற்றும் பயிற்சி பிரிவின் இணைந்து இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கைகள் வீரவில தொழில்நுட்ப கல்வி நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டு, நாடு முழுவதும் பரந்து காணப்படும் ஏனைய தொழில்நுட்ப கல்லூரிகளுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளது.
 
இந்த தொழில்நுட்ப கற்கை பயிற்சி நெறிகளின் போது, மாணவர்களுக்கு இலத்திரனியல் சுற்றுக்களை நிறுவும் போது, அபிவிருத்தியடைந்த நாடுகளில் பின்பற்றப்படும் தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய முறைகள் போன்றன குறித்து விளக்கமளிக்கப்படவுள்ளன. இந்த சமூக பொறுப்புணர்வு திட்டத்தில், களனி கேபிள்ஸ் பிஎல்சி இரண்டாவது வகையான திட்டத்தை தொழில்நுட்ப அதிகாரிகளுக்கும், நிபுணத்துவம் வாய்ந்த இலத்திரனியலாளர்களுக்கும் நவீன தொழில்நுட்ப முறைகள் குறித்து விளக்கமளிக்கப்படவுள்ளன. 
 
வீரவில பகுதியில் இடம்பெற்ற முதலாவது திட்டம் 60க்கும் அதிகமான மாணவர்களின் பங்குபற்றலுடன் வெற்றிகரமாக இடம்பெற்றிருந்தது. பிரதான போதனைகளை களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பொறியியலாளர் சஞ்சீவ குணதிலக முன்னெடுத்திருந்தார். அவரது போதனையில், நிர்மாணத் தன்மை, மாடிகளின் எண்ணிக்கை மற்றும் வௌ;வேறு தேவைகளுக்கு அமைவாக வயர்களை தெரிவு செய்தல், வௌ;வேறு வயர்களின் தரங்கள் மற்றும் பாதுகாப்பான முறையில் வயர்களை பதித்தல் போன்றன உள்ளடங்கியிருந்தன.
 
களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் வர்த்தக நாம முகாமையாளர் சன்ன ஜயசிங்க கருத்து தெரிவிக்கையில், 'இந்த திட்டத்தை தனது சமூக பொறுப்புணர்வு நடவடிக்கையாக எதிர்கால சந்ததியின் நலன் கருதி கம்பனி முன்னெடுக்கிறது. தொழில்நுட்ப கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டிருந்ததுடன், சர்வதேச தர நிர்ணயங்களை பின்பற்றுவது தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டிருந்தது' என்றார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில், 'நிர்மாணத்துறையில் ஈடுபடும் நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட முகாமையாளர்களின் நலன் கருதி இது போன்ற நிகழ்ச்சிகளை வருடம் முழுவதும் நடத்த நாம் தீர்மானித்துள்ளோம். நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டங்களை முன்னெடுக்க நாம் தீர்மானித்துள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .