
இலங்கையின் முதல் தர இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான களனி கேபிள்ஸ் ISO 6722 (SLS 412:2011) தரத்தில் அமைந்த ஒடோ இலத்திரனியல் கேபிள்களை சந்தையில் அறிமுகம் செய்திருந்தது. வாகனங்களில் பயன்படும் வகையில் உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்படும் வயர்களாக மேற்படி கேபிள்கள் அமைந்துள்ளன.
புதிய ஒடோ இலத்திரனியல் கேபிள் 600V வரையிலான மின்சாரத்தை தாங்கும் திறனை கொண்டுள்ளதுடன், -40 முதல் 100 பாகை செல்சியஸ் வரையிலான வெப்பநிலைக்கு ஈடுகொடுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வகையான கேபிள்களை இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் பயன்படுத்தப்படும் எந்தவொரு நவீன ரக வாகனத்துக்கும் பயன்படுத்த முடியும்.
மேலும், புதிய ஒடோ இலத்திரனியல் கேபிள்கள் வாகனங்களில் ஏற்படும் எந்த வகையான பழுதுகளுக்கும் ஈடுகொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. முன்னர் வாகன இலத்திரனியல் கேபிள்கள் SLS 412:1998 எனும் தரத்துக்கு அமைவாக தயாரிக்கப்பட்டிருந்தன. இவை 100V மின் அளவை மட்டும் தாங்கும் திறன் கொண்டதாகவும், 70 பாகை செல்சியஸ் வரையிலான வெப்பநிலைக்கு மட்டும் ஈடுகொடுக்கும் தன்மையை கொண்டிருந்தன.
களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) அனில் முனசிங்க கருத்து தெரிவிக்கையில், 'உயர் தரங்களுக்கு அமைவாக தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்படும் கேபிள் வகையாக களனி ஒடோ கேபிள் அமைந்துள்ளது. 600V அளவிலான மின்சாரத்தை தாக்குப்பிடிக்கும் வகையில் நாம் இந்த கேபிளை வடிவமைத்துள்ளோம். அத்துடன் இந்த கேபிள் வகை -40 முதல் 100 பாகை செல்சியஸ் வரையிலான வெப்பநிலைக்கு ஈடுகொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம் இலங்கையின் வாடிக்கையாளர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் சிறந்த தீர்வுகளை வழங்கும் வகையில் அமைந்துள்ளது'.
'இந்த புதிய கேபிளின் மற்றுமொரு சிறப்பம்சமாக, ஏனைய ஒடோ கேபிள்களுடன் ஒப்பிடுகையில், இந்த கேபிள் வகை சந்தையில் மிகவும் உயர்ந்த தரத்தில் அமைந்துள்ளதாகும். ஊதாரணமாக, ஒரு சதுர மில்லிமீற்றர் கேபிள் ஒன்றில் 14 வயர்கள் மாத்திரமே உள்ளடங்கியிருக்கும். அவை ஒவ்வொன்றினதும் பருமன் 0.3 மில்லி மீற்றர்களாக அமைந்திருக்கும். எமது புதிய கேபிளில் ஒரு சதுர மில்லிமீற்றரில் 32 வயர்கள் காணப்படுவதுடன், அவை ஒவ்வொன்றும் 0.2 மில்லி மீற்றர் பருமனை கொண்டுள்ளன. எனவே எமது கேபிள் அதிகளவு இழுவைத்திறனை கொண்டதாக அமைந்துள்ளதுடன், எந்த விதமான இலத்திரனியல் வேலைக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும்' என்றார்.
'வாகனங்களில் இலத்திரனியல் சுற்றுக்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவதில் ஈடுபட்டுள்ள தொழில்நுட்பவியலாளர்களும் சர்வதேச தரத்துக்கு அமைவாக தயாரிக்கப்படும் புதிய இலத்திரனியல் கேபிள்களின் மூலமாக பயன்பெற முடியும். அத்துடன் வாகன உரிமையாளர்களும் நம்பிக்கையுடன் தமது பழுது பார்த்தல்களை மேற்கொள்ள முடியும்' என பொது முகாமையாளர் மேலும் குறிப்பிட்டார்.
களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் மூலம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த இலத்திரனியல் கேபிள்களை வௌ;வேறான வர்ணங்களிலும் 30 மீற்றர் மற்றும் 100 மீற்றர் பொதிகளிலும் பெற்றுக் கொள்ள முடியும்.
களனி கேபிள்ஸ் என்பது 100 வீதம் இலங்கையை சேர்ந்த கம்பனியாகும். சுமார் 43 வருட காலமாக இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அண்மையில் நிறைவடைந்த SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2012 இல், களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு சிறந்த வர்த்தக நாமத்துக்கான வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது. களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு தரச்சிறப்புக்கான ISO 9000:2008 சான்று, சிறந்த சூழல் முகாமைத்துவத்துக்கான ISO 14001:2004 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன. தய்கி அகிமொடோ 5S விருதுகளின் தங்க விருதும் களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பாடல்கள் துறையில் 'சுப்பர் பிராண்ட்ஸ்' தர விருதையும் 2008ஆம் ஆண்டில் களனி கேபிள்ஸ் பெற்றுள்ளது.