
இலண்டன் பொதுநலவாய வர்த்தக மன்றத்தின் பங்களிப்புடன் இடம்பெற்ற பொதுநலவாய வர்த்தக பேரவையின் (CBF) உத்தியோகபூர்வ அன்பளிப்பு மற்றும் நினைவுச்சுவடுகள் பங்காளராக இலங்கையின் அன்பளிப்பு மற்றும் நினைவுச்சுவடுகளை வடிவமைப்பதில் பிரபல்யம் பெற்ற லக்சல நிறுவனம் இணைந்து கொண்டிருந்தது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டின் ஒரு பிரிவான வர்த்தக பேரவையானது நவம்பர் மாதம் 12 - 14ஆம் திகதி வரை சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது. வர்த்தக பேரவை 2013இன் பிரதம விருந்தினராக அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டிருந்தார்.
இந்த பங்காண்மை குறித்து லக்சல நிறுவனத்தின் தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அனில் கொஸ்வத்த கருத்து தெரிவிக்கையில், 'இது எமக்கு மிகப்பெரிய சாதனையாகும். பொதுநலவாய, இந்திய மற்றும் சார்க் நாடுகளின் அபிவிருத்திகளுக்கு பங்களிப்பினை வழங்கும் நோக்கத்தைக் கொண்ட இப் பெருமைக்குரிய பேரவையின் ஓர் அங்கமாக நாம் இருப்பதை முன்னிட்டு மகிழ்ச்சியடைகிறோம். இலங்கையின் கைவினைப்பொருள் துறையினை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பிரபல்யப்படுத்தும் நோக்கில், உத்தியோகபூர்வ அன்பளிப்பு மற்றும் நினைவுச்சுவடுகள் பங்காளரான லக்சல நிறுவனத்தின் மூலம் இப் பேரவையில் பங்கேற்கவுள்ள அரச தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் மற்றும் சர்வதேச வர்த்தக தலைவர்களுக்கு 'All of Sri Lanka' என்பதை பிரதிபலிக்கும் கூட்டுறவு பரிசு வழங்கப்படவுள்ளது' என தெரிவித்தார்.
இவ் வருடம் நடைபெற்ற வர்த்தக பேரவையில் நைஜீரிய ஜனாதிபதி HE Goodluck ஜொன்சன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃவ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, UAE மாநில அமைச்சர் டாக்டர்.சுல்தான் அஹமட் அல் ஜாபர், பஜாஜ் ஒட்டோ இந்தியாவின் தலைவர் ராகுல் பஜாஜ், CDC UK குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டயானா நோபல், UK ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கியின் உப தலைவர் சேர் தோமஸ் ஹரிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இரத்தினக்கல் மற்றும் ஆபரண வரிசைகளை விஸ்தரிக்கும் நோக்கில், லக்சல நிறுவனம் திவி நெகும சமூக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி; அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய, பேராதனை தாவரவியல் பூங்காவின் நுழைவாயிலில் புதிய லக்சல காட்சியறை அமைத்திருந்தது.
'நிதி நெருக்கடிகள் மற்றும் முகாமைத்துவ சிக்கல்கள் காரணமாக குறைவான செயற்திறனின் கீழ் வகைப்படுத்தப்பட்ட லக்சல நிறுவனம் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் செயற்படாத அரச நிறுவனமாக கருதப்பட்டது. இருப்பினும் இன்று, லக்சல நிறுவனம் நாடுபூராகவும் 15 கிளைகளை தன்னகத்தே கொண்டுள்ளதுடன், இலங்கையின் பாரம்பரிய கைப்பொருட்கள் மற்றும் வர்த்தகநாமங்கள்/ தயாரிப்புகளை உள்நாட்டவர்களுக்கும் விசேடமாக சுற்றுலாப் பயணிகளுக்கும் வழங்கி வருகிறது. கடந்த 2012ஆம் ஆண்டின் நிதி அமைச்சின் ஆண்டறிக்கையில் இலாபகரமான நிறுவனமாக லக்சல சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.