.jpg)
-ச.சேகர்
டிசெம்பர் மாதத்தின் முதல் வார கொடுக்கல் வாங்கல்களை கொழும்பு பங்குச்சந்தை உயர்ந்த பெறுமதியில் நிறைவு செய்திருந்தது. கொமர்ஷல் லீசிங் பங்குகள் மீது முதலீட்டாளர்கள் அதிகளவு நாட்டம் காண்பித்திருந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5,810.24 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3183.09 ஆகவும் அமைந்திருந்தன.
டிசெம்பர் 02ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 4,691,747,416 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 22,998 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 21,717 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,281 ஆகவும் பதிவாகியிருந்தன.
திங்கட்கிழமை
பங்குச்சந்தை நடவடிக்கைகளில் நேர்த்தியான பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. மொத்தப்புரள்வு பெறுமதி 800 மில்லியனை விட அதிகரித்து நிறைவடைந்திருந்தது. இதில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், லங்கா IOC மற்றும் கொமர்ஷல் லீசிங் மற்றும் ஃபினான்ஸ் போன்றன பங்களிப்பை வழங்கியிருந்தன. ஸ்ரீலங்கா ரெலிகொம் மற்றும் கார்சன்ஸ் கம்பர்பெட்ச் ஆகிய பங்குகள் மீதான விலைச்சரிவு, இரு சுட்டிகளையும் மறைபெறுமதியில் நிறைவடைய ஏதுவாக அமைந்திருந்தன. மேலும், ஒரியன்ட் காமன்ட்ஸ் மற்றும் PCH ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகள் மீது கலந்த ஈடுபாடு காணப்பட்டது.
செவ்வாய்க்கிழமை
பங்குச்சந்தையின் மொத்தப்புரள்வு பெறுமதி 1 பில்லியன் பெறுமதியை அண்மித்து நிறைவடைந்திருந்தது. இரு பிரதான சுட்டிகளும் மறை பெறுமதியை பதிவு செய்து நிறைவடைந்திருந்தன. இதில் கார்சன் கம்பர்பெட்ச் மற்றும் லங்கா IOC போன்றன பங்களிப்பை வழங்கியிருந்தன. கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ், சிலோன் டொபாக்கோ மற்றும் செலான் வங்கி ஆகியன சந்திப்புகளை பதிவு செய்திருந்தன. ஆகிய பங்குகள் மீதான விலைச்சரிவு, இரு சுட்டிகளையும் மறைபெறுமதியில் நிறைவடைய ஏதுவாக அமைந்திருந்தன. மேலும், PCH ஹோல்டிங்ஸ் அதிகளவில் கைமாறியிருந்தது, அதேவேளை, டயலொக் ஆக்சியாடா பங்குகளை வெளிநாட்டவர்கள் விற்பனை செய்திருந்தனர்.
புதன்கிழமை
மாதத்தில் முதல் தடவையாக பிரதான சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்து நிறைவடைந்திருந்தன. சிலோன் டொபாக்கோ கம்பனி, லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி மற்றும் தேசிய அபிவிருத்தி வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்களிப்பின் காரணமாக சுட்டிகள் உயர்வான பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. மொத்தப்புரள்வு பெறுமதியும் 800 மில்லியன் ரூபா எனும் நிலையான பெறுமதியில் நிறைவடைந்திருந்தது. இதில் கொமர்ஷல் லீசிங் மற்றும் ஃபினான்ஸ், லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி, எக்ஸ்போலங்கா ஹோல்எங்ஸ் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மீதான மொத்த வியாபாரங்கள் பங்களிப்பை வழங்கியிருந்தன. E-செனலிங் மற்றும் வலிபல் பவர் ஆகிய பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
வியாழக்கிழமை
மொத்த சந்தைப்புரள்வு பெறுமதி மாதத்தில் முதல் தடவையாக, 1 பில்லியன் ரூபா எனும் பெறுமதியை விட அதிகரித்து நிறைவடைந்திருந்தது. கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ், லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி மற்றும் சிலோன் கிரெய்ன் எலிவேற்றர்ஸ் ஆகியன மீதான மொத்த கொடுக்கல் வாங்கல்கள் இதில் பங்களிப்பை வழங்கியிருந்தன. ஆனாலும் இரு பிரதான சுட்டிகளும் லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி, புக்கிட் தாரா மற்றும் செவ்ரோன் லுப்ரிகன்ட்ஸ் ஆகிய பங்குகளின் மீது விலைச்சரிவு காரணமாக சரிவை பதிவு செய்திருந்தன. மேலும், E-செனலிங் மற்றும் டிஸ்டிலரீஸ் போன்ற பங்குகள் மீது நடிவக்கைகளும் பதிவாகியிருந்தன.
வெள்ளிக்கிழமை
மொத்தப்புரள்வு பெறுமதி அரை பில்லியனை விட அதிகரித்து நிறைவடைந்திருந்தது. டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் கொடுக்கல் வாங்கல்களில் அதிகரிப்பு காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது. மொத்தப்புரள்வு பெறுமதியில் நெஸ்லே லங்கா, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் ஆகியவற்றின் மீதான மொத்த கொடுக்கல் வாங்கல்கள் அதிகளவு ஈடுபாட்டை பதிவு செய்திருந்தது. இரு சுட்டிகளும் நேர் பெறுமதிகளை பதிவு செய்து நிறைவடைந்திருந்தன. நெஸ்லே லங்கா இதில் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தது. இதேவேளை, E-செனலிங் பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் தமது ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருந்தனர்.
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் ரேடியன்ட் ஜெம்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (உரிமை), நெஸ்லே, சீகிரிய விலேஜ். மற்றும் ரம்பொட ஃபோல்ஸ் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.
லங்கா சென்ச்சரி (உரிமை), PCH ஹோல்டிங்ஸ், மொரிசன்ஸ், ஒஃபிஸ் எக்யுப்மன்ட். மற்றும் சிலோன் லெதர்(உரிமை) போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.
தங்கம் மற்றும் வெள்ளி விலை
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 43,500 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 40,000 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 132.43 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 216.98 ஆக காணப்பட்டிருந்தது.