2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கையடக்க தொலைபேசிகளின் மூலம் இ-சேவைக்கான கட்டணங்களை செலுத்த நடவடிக்கை

Super User   / 2013 டிசெம்பர் 19 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச இ-சேவைகளை இணையத்தின் மூலம் பெற்றுக்கொள்வதற்கான கட்டணங்களை கையடக்கத் தொலைபேசியின் மூலம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியை நுகர்வோருக்கு ஏற்படுத்த இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் ('இக்டா') நடவடிக்கை எடுத்துள்ளது.

'இக்டா'வும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனமொன்றாகிய டயலொக்கும் ஒன்று சேர்ந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தினை அமுல்செய்யவுள்ளது.

இதன் காரணமாக (லங்கா கேட்)  இலங்கை நுழைவாயில் எனும் அரசாங்க இ-சேவைகளுக்கான பணம் செலுத்தும் தலைவாசலின் மூலம் பரவலான சேவையொன்றை வழங்க வசதியேற்படுகின்றது. இது சேவை பெறுபவர்களுக்கு ஒரு பெரிய வசதியொன்றென்று 'இக்டா' கூறுகிறது.

தற்போது 25 அரசாங்க நிறுவனங்களின் சேவைகளை இ-சேவைகளாகப் பெறறுக்கொள்ள முடியுமென எடுத்துக்காட்டும் 'இக்டா', இ-சேவைகளைப் பெற்றுக்கொள்ளவதற்காக இதுவரை ஏறத்தாழ 25,000 பேர் www.srilanka.lkஎன்னும் இணையத்தளத்தின் மூலம் தம்மைப் பதிவு செய்துகொண்டுள்ளனர் எனக் கூறுகிறது.


இப் பணம் செலுத்தும் சேவை தொடர்பான ஒப்பந்தத்துக்குக் கைச்சாத்திட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
இதன்போது இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், 'இக்டா'வின் தலைவரும் ஜாதிபதியின் சிரேஷ்ட ஆலொசகரும் பேராதனைப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் பீ. டபள்யு. ஆப்பாசிங்ஹ, 'இக்டா'வின் பணிப்பாளர் நீதி ஆலோசகர் ஜயந்த பர்ணாந்து மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனமாகிய டயலொக் அகிசியாட்டாவின் குழு பிரதான நிறைவேற்றுநர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .