2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அச்சுவேலி தொழிற்பேட்டையின் செயற்பாடுகள் அடுத்தமாதம் ஆரம்பம்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 30 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அச்சுவேலி தொழிற்பேட்டையின் செயற்பாடுகள் அடுத்தமாதம் முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக இடம்பெறும் இந்த தொழிற்பேட்டை அமைக்கும் செயற்பாடுகளின் முதலாவது கட்டம் 2014 ஜனவரி மாதத்தில் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இதனைத் தொடர்ந்து 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள முதலாவது கட்ட செயற்பாடுகள் அடுத்தமாதம் முதல் இயங்க ஆரம்பிக்கும் எனவும், இந்த செயற்பாடுகளை துரித கதியில் பூர்த்தி செய்யுமாறும், இந்த நிர்மாணப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணித்திருந்தார். 
 
இந்தியா மற்றும் இலங்கையின் முதலீட்டில் மீள அமைக்கப்படும் இந்த தொழிற்பேட்டை இந்த பகுதியில் இடம்பெற்றிருந்த யுத்தம் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்த தொழிற்பேட்டையை நிர்மாணிப்பதற்காக இந்தியா 175 மில்லியன் ரூபாவையும், இலங்கை 25 மில்லியன் ரூபாவையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .