2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இலங்கையின் முதல் தர வர்த்தக நாமமாக சிங்கர் மீண்டும் தெரிவு

A.P.Mathan   / 2014 மார்ச் 03 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் காணப்படும் சிறந்த வர்த்தக நாமமாக சிங்கர் வர்த்தக நாமம் இலங்கையர்களால் மீண்டும் ஒரு தடவை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகம் நீல்சன் ஆகியன இணைந்து முன்னெடுத்திருந்த SLIM நீல்சன் மக்கள் விருதுகள் 2014 நிகழ்வில் சிங்கர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டிருந்தது.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னதாக மக்கள் விருதுகள் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து சிங்கர் ஆண்டின் சிறந்த வர்த்தக நாமமாக தெரிவு செய்யப்பட்டு வந்துள்ளமை விசேட அம்சமாகும்.

சந்தைப்படுத்தல் துறையை ஊக்குவிக்கும் வகையில் வருடாந்தம் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை SLIM முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .