2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ரூபாவின் பெறுமதி நிலையானதாக அமைந்திருக்கும்: அஜித்

A.P.Mathan   / 2014 மார்ச் 20 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடப்பு ஆண்டின் இலங்கை ரூபாவின் பெறுமதி நிலையானதாக அமைந்திருக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்திருந்தார்.

ஏற்றுமதி மூலமான வருமதிகள் அதிகரித்துக் காணப்படும் நிலையில் இந்த எதிர்பார்ப்பு உறுதியாக காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசெம்பர் முதல் ரூபாவின் பெறுமதி உறுதியாக காணப்படுகிறது.

சாதாரணமாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ரூபாவின் பெறுமதி சரிவடையும், ஏனெனில் புதுவருட பண்டிகையை முன்னிட்டு இறக்குமதிகள் அதிகரித்துக் காணப்படும். ஆயினும் இந்த ஆண்டு அதிகளவு ஏற்றுமதிகள் காணப்படுவதால் இந்த நிலையை எதிர்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X