2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிள் ஓட்டத்துக்கு மொபில் அனுசரணை

A.P.Mathan   / 2014 மார்ச் 29 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் இடம்பெறும் முதலாவது நட்புறவு அடிப்படையிலான மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டிக்கு அனுசரணை வழங்க மொபில் முன்வந்துள்ளது. மலேசிய நாட்டின் முன்னணி மோட்டார் சைக்கிள் செலுத்துநர்களையும், இலங்கையைச் சேர்ந்த வீரர்களையும் கொண்டு 'Discovering Sri Lanka Friendship Ride 2014' எனும் தலைப்பில் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சைக்கிளோட்டம் அமையவுள்ளது.

ஹார்லி டேவிட்சன், பிஎம்டபிள்யு, ட்ரையம்ப் மற்றும் டுக்காடி போன்ற உலகப்புகழ் பெற்ற மோட்டார் சைக்கிள்கள் இந்த சைக்கிளோட்டத்தில் பங்கேற்கவுள்ளதுடன், இவற்றை மலேசிய ஓட்டுநர்கள் செலுத்தவுள்ளனர். மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி வரை நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 14 நாட்கள் வரை இடம்பெறவுள்ள இந்த சைக்கிளோட்டம், இலங்கையின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களாக கோலாலம்பூர் நகரைச் சேர்ந்த Buzzword கூட்டாண்மை தொடர்பாடல்கள் நிறுவனம் செயற்படுகிறது. இந்த நிறுவனத்தை இலங்கையில் பிறந்து மலேசியாவில் வாழும் மூன்றாம் தலைமையை சேர்ந்த லெஸ்லி திலக் ஜயவர்தன செயற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வு தொடர்பில் மெக்லரென்ஸ் லுப்ரிகன்ட்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஜயவர்தன கருத்து தெரிவிக்கையில், 'மொபில் என்பது ஓட்டப்பந்தயங்களுடன் அதிகளவு தொடர்பை பேணி வருகிறது. மோட்டார் கார்கள் முதல் மோட்டார் சைக்கிள்கள் வரை இந்த பிணைப்பு பேணப்படுகிறது. இந்த சைக்கிளோட்டம் தொடர்பில் நாம் கேள்வியுற்றவுடன், இந்த நிகழ்வில் நாமும் இணைந்து கொள்ள தீர்மானித்தோம். இந்த நிகழ்வில் பங்கேற்கும் ஓட்டுநர்கள் மொபில் வர்த்தக நாமத்தின் சிறப்பு குறித்து நன்கு அறிந்தவர்களாக உள்ளனர். இலங்கையில் இவர்கள் பங்கேற்கும் இந்த சைக்கிளோட்டத்தின் மூலம் இவர்களுக்கு உன்னதமான அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .