2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பங்குச்சந்தை மற்றும் தங்கம் விலை நிலைவரங்கள்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 28 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்


விடுமுறை வாரத்தை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாக பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல் கடந்த பதினொரு வாரங்களில் பதிவு செய்திருந்த உயர்ந்த பெறுமதிகளை கடந்தவார கொடுக்கல் வாங்கல்களின் போது பதிவு செய்திருந்தது. முதல் நான்கு தினங்களில் அதிகளவு பங்கு கொள்வனவில் அதிகளவில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள், கடந்த வெள்ளிக்கிழமை பங்கு விற்பனையில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது. வெள்ளிக்கிழமை நடவடிக்கைகள் நிறைவடைந்த போது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6,167.81 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3387.97 ஆகவும் பதிவாகியிருந்தன.

ஏப்ரல் 21ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 4,068,977,546 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 28,663 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 27,559 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,104 ஆகவும் பதிவாகியிருந்தன.

திங்கட்கிழமை
சந்தை தொடர்ந்தும் நேர் பெறுமதியை பதிவு செய்திருந்தது. குறிப்பாக கார்சன் கம்பர்பட்ச் பங்குகளின் பங்களிப்புடன். புரள்வு பெறுமதி 800 மில்லியன் ரூபா பெறுமதியை கடந்திருந்தது. ரோயல் செரமிக்ஸ் பங்குகள் இதில் 33 வீத பங்களிப்பை வழங்கியிருந்தன. சன்சைன் ஹோல்டிங்ஸ் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தது. பிரமல் க்ளாஸ், லங்கா ஐஓசி, எக்ஸ்போலங்கா மற்றும் ஓவர்சீஸ் ரியல்டி ஆகிய பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தியிருந்தனர். வெளிநாட்டவர்களின் ஈடுபாடு குறைவாக பதிவாகியிருந்தது.

செவ்வாய்க்கிழமை
சுட்டிகள் தொடர்ந்தும் நேர் பெறுமதிகளை பதிவு செய்து நிறைவடைந்திருந்தன. பங்குச்சந்தை 11 வாரங்களில் பதிவாகிய உயர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. புரள்வு பெறுமதியில் வங்கித்துறை பங்குகள் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தன. சம்பத் வங்கி பங்குகள் மீது உயர் பெறுமதி வாய்ந்த ஈடுபாடு காணப்பட்டது. கொமர்ஷல் வங்கி பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தது. பிரமல் கிளாஸ் மற்றும் ஒரியன்ட் காமன்ட்ஸ் பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தியிருந்தனர். வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஆர்வம் செலுத்தியிருந்தனர். (கொமர்ஷல் வங்கி மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் கொள்வனவில்) புரள்வு பெறுமதியில் வெளிநாட்டவர்களின் கொள்வனவு பெறுமதி 41 வீதமாக பதிவாகியிருந்தது.

புதன்கிழமை
தொடர்ந்து ஐந்து நாட்கள் உயர்ந்த பெறுமதிகளை பதிவு செய்த கொழும்பு பங்குச்சந்தை, புக்கிட் தாரா மற்றும் சிலோன் டொபாக்கோ கம்பனி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலைச்சரிவை தொடர்ந்து மறை பெறுமதியை பதிவு செய்து நிறைவடைந்திருந்தது. புரள்வு பெறுமதி 670 மில்லியன் ரூபாவை கடந்திருந்தது. ஹற்றன் நஷனல் வங்கி வாக்குரிமை மற்றும் வாக்குரிமையற்ற பங்குகள் மற்றும் சம்பத் வங்கி பங்குகளின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தது. ஒரியன்ட் காமன்ட்ஸ், களனி டயர்ஸ் மற்றும் ஓவர்சீஸ் ரியல்டி ஆகிய பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தியிருந்தனர். வெளிநாட்டவர்கள் தொடர்ந்து பங்குகள் கொள்வனவில் ஆர்வம் செலுத்தியிருந்தனர்.

வியாழக்கிழமை
சந்தை நேர்பெறுமதிகளை பதிவு செய்து நிறைவடைந்திருந்தது. புரள்வு பெறுமதி 1.1 பில்லியன் ரூபாவை கடந்திருந்தது. ஜோர்ஜ் ஸ்ருவர்ட் ஃபினான்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஹற்றன் நஷனல் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் மற்றும் சம்பத் வங்கி ஆகியவற்றின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தது. யூனியன் வங்கி, வட்டவளை பிளான்டேஷன்ஸ், சிட்ரஸ் லெய்ஷர் மற்றும் லங்கா வோல்டைல்ஸ் போன்ற பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகளவு காணப்பட்டது. புரள்வு பெறுமதியின் 45 வீதத்தை வெளிநாட்டு கொள்வனவு பதிவு செய்திருந்தது.

வெள்ளிக்கிழமை
சிலோன் டொபாக்கோ பங்குகள் மீது விலைச்சரிவுகள் பதிவாகியமையால், பங்குச்சந்தை மறைபெறுமதிகளை பதிவு செய்து வாரத்தை பூர்த்தி செய்திருந்தது. சன்சைன் ஹோல்டிங்ஸ் மற்றும் சம்பத் வங்கி பங்குகள் மீது சந்திப்புகள், புரள்வு பெறுமதியில் 40 வீதத்தை பதிவு செய்திருந்தன. இதேவேளை, ரோயல் செரமிக்ஸ், நேஷன் லங்கா ஃபினான்ஸ் மற்றும் சொஃவ்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் போன்ற பங்குகள் மீது அதிகளவு ஈடுபாடு காணப்பட்டது. பிசிஎச் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு காணப்பட்டது. வெளிநாட்டவர்களின் பங்களிப்பு குறைந்த மட்டத்தில் காணப்பட்டது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் ஜி.எஸ்.ஃபினான்ஸ், பீசி ஹவுஸ் , ஒரியன்ட் காமன்ட்ஸ், சிலோன் லெதர் (உரிமை) மற்றும் பீசிஎச் ஹோல்டிங்ஸ் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

ஹியுஜே, ஏஐஏ இன்சூரன்ஸ், பன்செய் றிசோர்ட்ஸ், சிலோன் லெதர் (உரிமை) மற்றும் சியெர்ரா கேபிள்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.


தங்கம் விலை நிலைவரம்
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 45,500 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 42,000 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.

நாணய மாற்று விகிதம்

கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 132.04 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 222.49    ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .