2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சிலோன் டொபாக்கோ கம்பனியின் வருமானம் அதிகரிப்பு

A.P.Mathan   / 2014 மே 12 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடப்பு நிதியாண்டின் முதலாம் காலாண்டில் சிலோன் டொபாக்கோ கம்பனியின் வருமானம் 38.4 வீத அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. ஆயினும் இந்த காலப்பகுதியில் நிறுவனத்தின் விற்பனை அளவு 3.6 வீத சரிவை பதிவு செய்திருந்தது.

நிறுவனத்தின் தொழிற்படு செலவீனங்களில் கணிசமான குறைப்பை முதலாவது காலாண்டில் ஏற்படுத்தியிருந்ததாகவும், இதன் காரணமாக கம்பனியின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடிந்ததாக நிறுவனம் அறிவித்திருந்தது.

பங்கிலாபமாக 10.82 ரூபாவை பங்கொன்றுக்கு வழங்க நிறுவனம் முன்வந்திருந்த போதிலும், வெள்ளிக்கிழமை பங்குப்பரிவர்த்தனை நடவடிக்கைகள் பூர்த்தியடையும் போது, பங்கொன்றின் விலை 10 ரூபாவால் குறைந்து 1090 ரூபாவாக பதிவாகியிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .