2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இலங்கையின் மூன்றாவது அனல் மின்உற்பத்தி நிலையம்

A.P.Mathan   / 2014 மே 21 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

300 மெகா வோற் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய கொள்ளளவை கொண்ட இலங்கையின் மூன்றாவது அனல் மின் உற்பத்தி நிலையம் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் பரீட்சார்த்த செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல் மின்உற்பத்த நிலையத்தொடரில் அமைந்துள்ள இந்த மூன்றாவது நிலையத்தின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடைந்த வண்ணமுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நிலையத்தின் பரீட்சார்த்த செயற்பாடுகள் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் சீன வடிவமைப்பாளர்களினால் இலங்கை மின்சார சபையிடம் கையளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் இரு அனல் மின்உற்பத்தி நிலையங்களின் மூலம் நாளாந்த மின்சார தேவையின் 35.5 வீதத்தை பூர்த்தி செய்யக்கூடியதாக அமைந்துள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X