2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இல்லத்தரசிகள் வாய்ப்பளிக்கும் சதாஹரித நிறுவனம்

A.P.Mathan   / 2014 மே 26 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


வணிக நோக்கிலான வனவளர்ப்பு செயற்பாட்டில் தலைமைத்துவத்தை கொண்டுள்ள சதாஹரித பிளாண்டேஷன் லிமிடெட், அகர்வுட் செய்கை மூலம் இல்லத்தரசிகளுக்கு வருவாயை ஈட்டிக்கொள்வதற்கான அரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிகளவு கேள்வி நிலவும் உலகின்; மிக விலையுயர்ந்த மரங்களுள் அகர்வுட் மரமும் ஒன்றாகும். இந் நிறுவனம் தற்போது இல்லத்தரசிகளுக்கான வீட்டுத்தோட்ட செய்கையாக அகர்வுட் செய்கையை ஊக்குவிக்கவுள்ளதுடன், அதனூடாக அவர்களுக்கு நீண்டகால வருவாயை பெற்றுக்கொள்வதற்கான பங்களிப்பை வழங்குவதற்கு எண்ணியுள்ளது.

இல்லத்தரசிகளுக்கும், வேலைக்குச் செல்பவர்களுக்கும் அகர்வுட் மரங்களை வளர்த்தல் மற்றும் பராமரித்தல் என்பது மிகச் சுலபமான காரியமாகும். ஏனைய செய்கையை போல, இந்த மரங்களை வளர்க்க மற்றும் பராமரிக்க வழமையான உரங்கள் மற்றும் நீர் அவசியப்படுகிறது. ஒருவருக்குச் சொந்தமான தோட்டத்தின் சுவர் எல்லைகளில் இம் மரங்களை நடுவதன் மூலம் நல்ல நிழலை பெற்றுக்கொள்ள முடியும்.

அகர்வுட் வாசணைமிக்கது, கருப்பு மற்றும் நறுமணமிக்க பிசின் கொண்ட ரசாயன பொருள் உள்ளடங்கியுள்ளது. வல்லப்பட்டை குறித்த செய்திகள் மற்றும் ஆய்வுகளில் பெரும்பாலான முதிர்ச்சி நிலையடைந்த வல்லப்பட்டை மரங்கள் அகர்வுட் பிசின்களை உற்பத்தி செய்வதில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

மரங்கள் பெரியளவில் வளராதிருப்பினும், நறுமண தண்டு உற்பத்தி முழுமையடைந்திருப்பின், அக்யூலாரியா மரங்களிலிருந்து அதிக அறுவடையை பெற்றுக்கொள்ள முடியும். நான்கு மீற்றர் உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட மரம் அறுவடைக்கேற்ற மரமாகும். பொதுவாக இம் மரங்கள் எட்டு வருடங்களுக்குள் முதிர்ச்சி நிலையை எய்துகின்றன.

இதற்கு மேலதிகமாக, அகர்வுட் மரங்களின் அறுவடையின் போது குறிப்பிட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அகர்வுட் தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையை கொண்டுள்ள இலங்கையின் ஒரேயொரு நிறுவனம் சதாஹரித ஆகும். பத்து மரங்களுக்கு மேல் கொள்வனவு செய்யும் ஒருவருக்கு, சதாஹரித மூலம் அகர்வுட் மரங்களை பராமரிப்பது தொடர்பில் இலவச நிபுணர் அறிவுரைகள் மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன. மேலும் இந் நிறுவனம், அறுவடைக்கு எவ்வித தொந்தரவோ அல்லது பிரச்சனையோ ஏற்படாத வகையில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட விலைக்கு அறுவடைகளை கொள்வனவு செய்கிறது.

சிறந்த அகர்வுட் உற்பத்தியை பெற்ற ஒரு மரத்திற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்ட குறைந்தபட்ச மீள்கொள்முதல் விலை ரூ.25இ000 ஆகும். இருப்பினும், அகர்வுட் மரமொன்றின் சாதாரண விலை ரூ.1இ400 ஆகும். எட்டு வருடங்களின் பின், உரிமையாளர் இம் மரத்திலிருந்து இத் தொகையை விட 15 மடங்கு இலாபத்தை பெற்றுக்கொள்ளலாம்.

தனது குடும்பத்தின் எதிர்கால முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் ஆர்வமுள்ள இல்லத்தரசிகளுக்கு அகர்வுட் செய்கை என்பது வீட்டு வளர்ப்புக்கான மிகச் சிறந்த தெரிவாகும். அகர்வுட்டினை பயன்படுத்தி விலை கூடிய வாசணைதிரவியங்கள், சாம்பிராணி மற்றும் அழகுசாதன பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அகர்வுட் தொடர்பில் சர்வதேச நாடுகளில் அதிகரித்த வண்ணமுள்ள கேள்வி காரணமாக, அகர்வுட் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

வீட்டுத் தோட்டங்களில் பெரிய மரங்கள் மற்றும் தாவரங்கள் போன்ற அலங்காரச் செடிகள் வளர்ப்பதை காட்டிலும், இல்லத்தரசிகள் அகர்வுட் மரங்களை வளர்ப்பதனூடாக தமது குடும்பத்திற்கு மேலதிக வருமானத்தை சம்பாதித்துக்கொடுக்க முடியும். இதற்கு மேலதிகமாக, வீட்டு தோட்டத்தில் அகர்வுட் மரங்களை நடுதலானது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தாவிட்டாலும், ஒருவரது வீட்டு தோட்டத்தில் மிகச்சிறிய சிரமத்தை உருவாக்கக்கூடும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X