2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

நேர்ஸர் சீக்ரட்ஸ்ஸுக்கு தேசிய பசுமை விருது

A.P.Mathan   / 2014 மே 28 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


அண்மையில் இடம்பெற்ற தேசிய பசுமை விருது வழங்கல் நிகழ்வில் இலங்கையில் நம்பர் வன் இயற்கை மூலிகை சார்ந்த அழகுசாதன வியாபார நாமமான Nature’s Secretsஐ உற்பத்தி செய்து விற்பனை செய்யும் Nature’s Beauty Creations (NBC) நிறுவனம் மதிப்பு மிக்க தேசிய பசுமை தங்க விருதினை வென்றுள்ளது. இந்நிறுவனம் தேசிய பசுமை விருதினை தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் தேசிய பசுமை விருது வழங்கல் விழா, கொழும்பு பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அங்கு NBC நிறுவனத்திற்குரிய விருது அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் NBC நிறுவனத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் சமந்த குமாரசிங்க அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இயற்கையின் உன்னத கொடையாகிய சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரச மற்றும் தனியார் துறைசார்ந்த நிறுவனங்களை ஊக்கவிப்பதற்காக சுற்றுச்சூழல் அமைச்சின் கீழ் செயற்படும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் ஆண்டு தோறும் தேசிய பசுமை விருது வழங்கல் விழா நடத்தப்படுகின்றது.

எதிர்கால சந்ததிக்காக இயற்கையை, சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கத்தை முன்நிறுத்தி தனது எல்லா நடவடிக்கைகளையும் மிக நேர்த்தியாக முன்னெடுத்துச் செல்லும் காரணத்திற்காக, இவ்விருதிற்காக விண்ணப்பித்த நூற்றுக் கணக்கான நிறுவனங்களுள் தேசிய பசுமை தங்க விருதுக்காக Nature’s Secrets நிறுவனம் தெரிவு செய்யப்பட்டது.

Nature’s Secrets நிறுவனமானது சுற்றாடலுக்குப் பாதிப்பேற்படாத வகையில் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடல், இயற்கை வளங்களையும், எரிபொருளையும் சிக்கனமாகப் பயன்படுத்துதல். சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தொழிற்சாலைக் கழிவுகளை அகற்றுதல், மூலிகைத் தோட்டமொன்றை உருவாக்கி பெருமளவு அரிய வகை மூலிகைச் செடிகளை மீள வளர்த்துப் பாதுகாத்தல், சூழலைப் பாதுகாத்தல் தொடர்பில் பாடசாலைச் சிறுவர்கள் மற்றும் நமது சமூகத்திற்கு அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது.

தேசிய பசுமை விருதினை தொடர்ச்சியாக மூன்று தடவைகள் வென்றது பற்றி Nature’s Secrets நிறுவனத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் சமந்த குமாரசிங்க அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் 'இயற்கையை பாதுகாக்கப் பாடுபடும் நம் நாட்டு நிறுவனம் என்ற வகையில், இதற்கு முன் நாம் பல விருதுகளை வென்றிருந்தாலும் இந்த தேசிய பசுமை தங்க விருதானது எமக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகவே நாம் கருதுகின்றோம்' எனத் தெரிவித்தார்.
 
சந்தையில் இருக்கும் பல்தேசிய அழகுசாதன நிறுவனங்களைப் பின்தள்ளி, இலங்கையில் நம்பர் வன் இயற்கை மூலிகை சார்ந்த அழகுசாதனப் பொருட்களின் உற்பத்தியாளர் என்ற வகையில் மக்களின் நம்பிக்கையை வென்ற Nature’s Secrets நிறுவனம். 2011 ஆம் ஆண்டு இவ் விருது விழா தொடங்கிய காலம் முதல் தொடர்ந்து இந்த மேன்மையான விருதினைப் பெறும் ஒரே அழகுசாதன உற்பத்தி நிறுவனம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவில் அங்கீகரிக்கப்பட்ட GMP மற்றும் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட ISO 9001 மற்றும் ISO 14001 தரச் சான்றுதழ்களின் கீழ் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் Nature’s Secrets நவீன தொழில்நுட்பத்துடன்கூடிய தொழிற்சாலையில், புராதன காலம் தொட்டு நாம் பயன்படுத்திவரும் மருத்துவக் குணம் நிறைந்த மூலிகைகளின் குண நலன்களை, நவீன அழகுசாதன உற்பத்தி தொழில்நுட்பத்துடன் இணைத்து, சர்வதேச தரத்திலான அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றது.

இந் நிறுவனத்தின் தொழிற்சாலையைச் சூழ மருத்துவக் குணம் நிறைந்த மூலிகைத் தோட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், 500 க்கும் மேற்பட்ட அறிய வகை மூலிகைச் செடிகள் அங்கு வளர்க்கப்பட்டு வருகின்றன. மருத்துவக்குணம் மிக்க மூலிகைகளை ஆய்வு செய்வதற்கும், அவற்றை விருத்தி செய்வதற்குமான வழிகளைக் கண்டறிவதற்கும் மூலிகை ஆய்வுகூடமொன்றை ஆரம்பித்து நடாத்திவரும் ஒரே தனியார் நிறுவனமாக இது திகழ்வதுடன், பெறுமதி மிக்க, அரிய வகை மூலிகைச் செடிகளை விருத்தி செய்து மக்களுக்கு விநியோகித்து, எதிர்கால சந்ததிக்கு அவற்றைப் பாதுகாத்துக் கொடுக்க வசதியாக செடிகளை விருத்தி செய்யும் அமைப்பொன்றும் இந்த ஆய்வுகூடத்தில் உள்ளது.

கடந்த ஒரு தசாப்த காலத்தில் நிலையான அபிவிருத்தியைக் கண்ட Nature’s Secrets இன் இலக்கு 2020 ஆம் ஆண்டில் இயற்கை மூலிகைசார் அழகுசாதன உற்பத்தியில், உலகில் முன்னணியில் திகழும் இலங்கை வியாபார நாமமாகத் திகழ்வதே ஆகும். அந்த இலக்கின் அடிப்படையில் Nature’s Secrets வியாபார நாமம் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், உலகளாவிய ரீதியில் பல நாடுகளுக்கு ஏற்கனவே ஏற்றுமதி செய்பப்பட்டு வருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .