2026 மே 09, சனிக்கிழமை

வெள்ளி மற்றும் வெண்கல விருதுகளை வென்ற பீப்பல்ஸ் லீசிங்

A.P.Mathan   / 2014 ஜூன் 11 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் வங்கியியல் சாராத நிதிச்சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமாக திகழும் பீப்பல்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் (PLC) இந்த ஆண்டின் SLIBFI (இலங்கை இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியல் துறை) விருசநடநயதுகள் வழங்கும் நிகழ்வில் வெள்ளி மற்றும் வெண்கல விருதுகளை தனதாக்கியிருந்தது. தொடர்ச்சியான மூன்றாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு இம்முறை கலதாரி ஹோட்டலில் மே மாதம் 27ஆம் திகதி நடைபெற்றிருந்தது.

SLIBFI விருதுகள் என்பது, இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதிச் சேவைகளை இலங்கையில் ஆறு பிரிவுகளில் முறையாக வழங்கி வரும் நிறுவனங்களை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகின்றது. இந்த ஆண்டு விருதுகள் வழங்கலில் ஆண்டின் சிறந்த நிதியியல் தாபனம் என்பதற்கான வெண்கல விருதை பெற்றிருந்ததுடன், ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் நிதியியல் அதிகாரி பிரிவில் பீப்பல்ஸ் லீசிங் கம்பனியின் நிறைவேற்று அதிகாரி எம். ஹிகம் ஹுசைன் வெள்ளி விருதையும் பெற்றிருந்தார்.

இந்த விருதுகள் தொடர்பில் பீப்பல்ஸ் லீசிங் கம்பனியின் வர்த்தக அபிவிருத்தி மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் உதவி பொது முகாமையாளர் ரொஹான் தென்னகோன் கருத்து தெரிவிக்கையில், 'இந்த பெருமைக்குரிய விருதுகளை வெற்றி பெற்றுள்ளமையையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம். எமது 'Al-Safa' இஸ்லாமிய நிதியியல் பிரிவு, SLIBFI விருதுகளுக்கு விண்ணப்பித்திருந்த முதல் தடவையிலேயே இரு விருதுகளை எம்மால் வெற்றி பெற முடிந்தமை என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.

'நாம் எமது 'Al-Safa' இஸ்லாமிய நிதியியல் பிரிவை 2005 ஆம் ஆண்டில் நிறுவியிருந்தோம். இந்தப் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட எமது சகல செயற்பாடுகளும் Shariah விதிமுறைகளுக்கமைய முன்னெடுக்கப்படுகின்றன. Shariah மேற்பார்வை சபையின் வழிகாட்டலின் கீழ் இந்த பிரிவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த செயற்பாடுகள் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி கண்டுள்ளன. Al-Safa பிரிவுகளை கொண்டியங்கும் சுமார் ஏழு கிளைகளை நாம் கொண்டுள்ளோம். இதற்கு மேலதிகமாக நாட்டின் சகல பகுதிகளையும் சேர்ந்த எந்தவொரு கிளையிலிருந்தும் இஸ்லாமிய நிதியியல் சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும்' என்றார்.

தென்னகோன் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், 'நாடு முழுவதும் Al-Safa சேவை வலையமைப்பை நிறுவ பீப்பல்ஸ் லீசிங் கம்பனி திட்டமிட்டுள்ளது. இவற்றின் மூலம் .இஸ்லாமிய நிதியியல் துறையில் சர்வதேச தராதரங்களுக்கு அமைவான சேவைகளையும் நிதி வசதிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளது. ஹிகம் ஹுசைன் அவர்களுக்கு எமது கம்பனியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்,

இலங்கையின் மிகப்பெரிய அரச வங்கியான மக்கள் வங்கியின் அங்கத்துவ நிறுவனமாக 1995 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட பீப்பல்ஸ் லீசிங் கம்பனி, இலங்கையில் முதற்தர லீசிங் கம்பனியாக கருதப்படுகிறது. லீசிங் துறையில் சந்தை தலைமைத்துவத்தை தொடர்ச்சியான 12 ஆண்டுகளாக இந்நிறுவனம் பேணி வருகிறது. பீப்பல்ஸ் லீசிங் கம்பனியின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு லீசிங், வாடகை கொள்வனவு, நிலையான வைப்பு, சேமிப்புக் கணக்குகள், கடன் வசதிகள், வாகன இறக்குமதிகள் மற்றும் இஸ்லாமிய நிதியியல் சேவைகள் போன்ற பல்தரப்பட்ட நிதிச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

குறுகிய காலப்பகுதியில் பீப்பல்ஸ் லீசிங் கம்பனி என்பது, தனது செயற்பாடுகளை விஸ்தரித்து, காப்புறுதி, நுண்நிதியியல், சொத்து அபிவிருத்தி மற்றும் வாகன பெறுமதி மதிப்பீடு மற்றும் நிர்வாக சேவைகளை முன்னெடுக்கும் வகையில் மேலும் ஐந்து அங்கத்துவ நிறுவனங்களான People’s Insurance Limited, People’s Microfinance People’s Leasing property Development Limited, People’s Leasing Fleet Management Limited,  People’s Leasing Havelock Properties Limited ஆகியவற்றை நிறுவியிருந்தது.

ஒரே கூரையின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு அவசியமான நிதிச் சேவைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகளை வழங்குவதுடன், வாடிக்கையாளர்களின் பெறுமதி வாய்ந்த நேரத்தையும், பணத்தையும் சேமிக்கும் வகையில் பீப்பல்ஸ் லீசிங் கம்பனி தனது சேவைகளை வழங்கி வருகிறது.
2005ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட பீப்பல்ஸ் லீசிங் கம்பனியின் Al-Safa இஸ்லாமிய நிதிப் பிரிவு, நாட்டின் முன்னணி சேவை வழங்கும் பிரிவாக உயர்ந்துள்ளது. முன்னைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2013/14 நிதியாண்டில் இந்த பிரிவு 142% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .